வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போது இன்டி கூட்டணி மூஞ்சியை எங்கே வைத்து கொள்வார்கள்.
புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், ஒப்புகை சீட்டுகள் இடையே முரண்பாடுகள் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அண்மையில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை விமர்சித்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டின.இந் நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், ஒப்புகை சீட்டுகள் இடையே முரண்பாடுகள் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; சுப்ரீம்கோர்ட், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி, ஓட்டுப்பதிவு நடந்த ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து 5 ஓட்டுச்சாவடிகளை தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஒப்புகைச் சீட்டுகள் நவ. 23ம் தேதி எண்ணப்பட்டன. அதன்படி, 288 ஓட்டுச் சாவடிகளில் மொத்தம் 1440 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன.அதில், ஒப்புகைச் சீட்டுகளில் உள்ள ஓட்டு எண்ணிக்கை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை பொருந்துகிறது. எனவே ஓட்டுப்பதிவில் எந்த முரண்பாடும் காணப்படவில்லை.இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இப்போது இன்டி கூட்டணி மூஞ்சியை எங்கே வைத்து கொள்வார்கள்.