உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b0r6bgjo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (டிச.,16) லோக்சபா கூடியதும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார்.

கிராமப்புற வளர்ச்சி

அப்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ''மஹாத்மா காந்தியை நம்புவது மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளையும் மத்திய அரசு பின்பற்றுகிறது. முந்தைய அரசுகளை விட மோடி அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளது'', என தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40% ஆக குறைத்துள்ளது'' என காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டினார். தொடர்ந்து மசோதா மீது அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.

புதிய மசோதா என்ன?

'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த புதிய மசோதா படி , 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிப்பு

முன்னதாக, இந்த 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து லோக்சபாவை ஒத்திவைத்து விட்டு, விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் எம்பி டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார்.எம்.பி.,க்கள் அமளியை தொடர்ந்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

போராட்டம்

100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் வளாகத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kalyanasundaram Linga Moorthi
டிச 16, 2025 21:22

increased 100 to 125 days means pay also will increase. there is 25% increase in working hours plus pay as Priyanka mentioned central government contribution is 40% which is wrong and it is 60% - she needs change her eye glass this will be helpful when there is no agric work and keeping the farmers active instead of sitting and sleeping and looking for jobs


Balaji
டிச 16, 2025 18:01

இந்த புதிய சட்டம், விவசாயி, விவசாயம், இருக்கும் நாட்களில், அவருக்கு, இத்திட்டத்தில் வேலை கொடுக்கப் படாது, என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது


Anvar
டிச 16, 2025 16:33

பேருல என்ன இருக்கு ராசா சார் மத்திய அரசு கொடுக்கும் காசை முழுமையாக பயனாளிகக்கு சேரவேண்டும் அந்த தான் திராவிட கழகங்கள் கொள்ளை அடிக்கின்றன வராத காசுக்கு என்ன பெரு இருந்தா ன்ன


முருகன்
டிச 16, 2025 15:37

ஆக மொத்தம் விவசாயம் செய்ய ஆட்கள் வரக்கூடாது அதற்கு தான் நூறு நாட்களில் இருந்து 125 ஆக உயர்வு


Suppan
டிச 16, 2025 16:31

முக்கியமான விவசாய நாட்களில் நடவு, அறுப்பு இந்தத்திட்டம் செயல் படாது. சம்பந்தப்பட்ட மாநில அரசு இந்த நாட்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் .


Mathan Dass
டிச 16, 2025 14:47

உதவாக்கரை சோம்பேறி திட்டம் .


Keshavan.J
டிச 16, 2025 14:43

இந்த மசோதாவை சொதப்பயலுங்க எதிர்ப்பு தெரிவிப்பானுங்க


RAJA
டிச 16, 2025 14:01

தமிழகத்திற்கு மட்டும் கலைஞர் 125 நாள் திட்டம் என்று பெயர் மாற்றி எங்களுக்கு புரியும் படி பெயர் மாற்றி அமைக்கவும். தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடாதீர்கள் மோடி ஜி.


RAAJ68
டிச 16, 2025 13:59

மகாத்மா காந்தியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர் பெயரை நீக்கிவிட்டு பதிலாக விக்ஸித் பாரத்ஜி ராம்ஜி என்று வாயில் நுழையாத பெயரை வைத்துள்ளதாக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டுள்ளது. புதிய பெயர் எல்லாம் தமிழர்களுக்கு எப்படி புரியும். அவர்களுக்கு இந்தி தெரியாது சம்ஸ்கிரதமும் தெரியாது தமிழக அரசும் மக்களை இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளக் கூடாது தமிழ் மட்டுமே எங்களுக்கு போதும் என்ற துருப்பிடித்து போன கொள்கையை திணித்து உள்ளது. எனவே மத்திய அரசு தமிழக மக்களுக்கு புரியும் வார்த்தையில் பெயர்களை வைக்கவும். மத்திய அரசு இந்தி பேசும் அரசா அல்லது நாட்டில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களுக்கான அரசா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 16, 2025 15:05

கவலைப்படாதீர்கள் திமுக ஐடி விங்க் ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றும் பணிகளை இப்போதே துவக்கி இருக்கும். அனேகமாக கே எஸ் யு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 1.25 என்று தமிழில் அனைவருக்கும் புரியும் படி பெயர் வைக்கலாம்


Suppan
டிச 16, 2025 16:32

இதற்குப்பெயர் ஜி ராம் ஜி


Barakat Ali
டிச 16, 2025 13:28

எல்லோ டவல் தீவட்டிக்கு பாரத ரத்துனாதான் தரமாட்டீங்க ....... பேரை இந்தத் திட்டத்துக்கு வெச்சா எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாருல்ல ????


Field Marshal
டிச 16, 2025 13:38

அஜித் ஜோகி முதல்வரா இருந்த போது சத்தீஸ்கரில் எல்லா கிராமங்களிலும் குளம் வெட்டுவதை கட்டாயப்படுத்தினார், நிறைவேற்றி காட்டினார் ...


முக்கிய வீடியோ