உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ​​உச்ச நீதிமன்ற நிருபராக சட்டப் படிப்பு தேவையில்லை : சந்திரசூட் உத்தரவு

​​உச்ச நீதிமன்ற நிருபராக சட்டப் படிப்பு தேவையில்லை : சந்திரசூட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்ற செய்தியாளர் பணிக்கு சட்டம் படிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் தொடர்பான செய்திகள், முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது. இதனை தளர்த்தி தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளராக விண்ணப்பிக்க சட்டப்படிப்பு தேவை என்ற நிபந்தனையை தளர்த்தி அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இனி சட்டபடிப்பு என்ற தகுதி தேவையில்லை. சட்டப் பின்னணி இல்லாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
அக் 25, 2024 05:15

சட்டம் படித்தவுடன் ஒருவருக்கு சரளமாக பொய் சொல்ல வரும். ஆகையால் மற்றவர்களை நியமிக்கலாம் என்று ஆணை. ஆனால் மற்றவர்கள் செய்தியை கதை போல திரித்து வெளியிடுவார்கள்.


J.V. Iyer
அக் 25, 2024 04:34

நாளை காலை எங்கள் வீட்டில் உப்புமா செய்தக்கூடாது என்று தடை விதையுங்கள் நீதி அரசர் அவர்களே. எப்போது பார்த்தாலும் உப்புமா.. சே..


Sree
அக் 24, 2024 22:17

விடு ஜுட் மன்றத்தில் தேச விரோத கழிவுகள் இனி அதிகம்


GMM
அக் 24, 2024 21:56

சட்டம் படித்தவர் தேவைக்கு மேல் நாட்டில் உள்ளனர் . சட்டப்படிப்பு ஒரு எளிமையான படிப்பு. மன்ற அங்கீகார பதவிக்கு சட்டம் தேவையில்லை என்ற உத்தரவு தற்போது ஏன்? தலைமை நீதிபதியாக இருந்தாலும் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? வேலைக்கு கல்வி தகுதி அவசியம். வேலைவாய்ப்பு துறை மத்திய அரசு அதிகாரி ஒப்புதல் தேவை. வாகனம் நிறுத்த மத்திய பொதுப்பணி அதிகாரி ஒப்புதல் தேவை. முன்னாள் சபாநாயர் பாண்டியன் கூறியது போல் வானளாவிய அதிகாரம் யாருக்கும் இருக்காது. ? கூட்டு பணி மற்றும் அதிகாரம் தான் பொருந்தும்.


புதிய வீடியோ