உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்

வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து அவர் கூறியதாவது: அனைத்தையும் விட உயிர் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதை சொல்வேன். எதிர்காலத்தில் ரோடு ஷோ நடத்தும் போது இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களை மூடிய கதவுகளுக்குள் அல்லது மைதானத்திற்குள் நடத்தலாம். உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது. பேரணியை நடத்தி இருக்கவும் கூடாது. என்னை பொறுத்தவரை ரோடு ஷோ நடத்தி இருக்கக்கூடாது.வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
ஜூன் 06, 2025 10:28

பெங்களூருவில் தினமுமே போக்குவரத்து நெரிசல் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் கூட ஆகின்றது. இப்படி இருக்க, ரோட் ஷோ தேவையே இல்லை. அங்குள்ள கிரிகட் மைதானத்திலோ அல்லது ரசிகர்கள் மட்டுமே கலந்து கொள்ளும்படியாகவும், பொது மக்களுக்கான போக்குவரத்தினை பாதிக்காமலும் ஊருக்கு வெளியே ஒரு மைதானத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். இப்படி ஏற்கனவே நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூருவில் ஊருக்கு நடுவில் தான் செய்வேன் என்று ஏற்பாடு செய்தது சரியல்ல. ஒப்புக் கொள்ள இயலாது. வெற்றி பெற்றும் சோகமாக மாறிவிட்டது.


theruvasagan
ஜூன் 06, 2025 09:48

என்ன வெற்றி. மண்ணாங்கட்டி. பாகிஸ்தானில் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தார்களா. உயிரைப் பணயம் வைத்து தாய்நாட்டை காப்பாற்றினார்களா. ஏலத்தில் விலைபோன விளையாட்டு பகடைக்காய்கள். காசு ஒன்றே குறி என்று செயல்படும் சூதாட்ட கும்பலி்ன் அங்கங்கள். அவர்களுக்கு எதற்கு மரியாதை பாராட்டு வெற்றிவிழா எல்லாம்.


angbu ganesh
ஜூன் 06, 2025 09:28

CSK பெறாத வெற்றியா அடக்கமா இல்ல என்னமோ காணாததை கண்டுட்டா மாதிரி சேய் வெக்க கேடு தமிழ் நாட்டை பாத்து கத்துக்கோங்க தேவ இல்லாம ஆட்டம் போடாதீங்க


முருகன்
ஜூன் 05, 2025 22:34

நல்ல கருத்து மனதில் பட்டதை பேசும் நல்ல மனிதர்


ஷாலினி
ஜூன் 05, 2025 22:26

காம்பீருக்கு பாராட்டு


ஆனந்த்
ஜூன் 05, 2025 22:25

சரியான கருத்தை சொல்லி உள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை