உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qm68pn42&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லியில் சுற்றித்திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடித்து, முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க உத்தரவிட்டது.மேலும், நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை டில்லி அரசு மற்றும் மாநகராட்சி மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரிக்க, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவு அடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) தீர்ப்பு அளித்தது. அதன் விபரம் பின்வருமாறு:* தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை. வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க வேண்டும்.* பிடித்து செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க வேண்டும். ரேபிஸ் மற்றும் தொற்றுள்ள நாய்களை காப்பகங்களை அடைக்க வேண்டும் * தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்கக்கூடாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராகுல் வரவேற்பு

தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க தேவையில்லை என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விலங்கு நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நான் வரவேற்கிறேன். இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Brahamanapalle murthy
ஆக 23, 2025 11:16

what is the use of returning it back to its location. Again it will start biting the people. If it becomes a man-eater even tiger or lion is being shot dead. IF so, if these dogs trouble humans, it ought to be killed or to be relocated elsewhere in a closed surroundings. Ordinary people and especially senior citizens and children needs protection. what will Court say on this?


Parthasarathy Badrinarayanan
ஆக 23, 2025 05:35

தெருவில் நடந்தால் தெரியும். அவர்களை கடித்தால் தெரியும். தவிர டில்லி என்றும்


SP
ஆக 22, 2025 23:43

ஊருக்கு ஊர் எவனோ ஒரு ஜோசியக்காரன் சொன்னார்என்று தெரு நாய்களுக்கு பால் பிஸ்கட் என்று தினமும் இரு வேளையும் வினியோகித்து கொண்டிருக்கின்ற அவர்களை கைது செய்ய வேண்டும்.


தத்வமசி
ஆக 22, 2025 22:26

நீதிமன்ற வளாகங்களில், நாய் வளர்ப்போர் சங்கத்தவர்கள், வாதாடிய வக்கீல்கள், பீட்டா அமைப்பாளர்களின் வீடுகளில் விட்டு விட்டு வரலாம். மக்கள் ஏன் இவற்றை தாங்கிக் கொள்ள வேண்டும் ?


Subburamu Krishnasamy
ஆக 22, 2025 19:53

Consistently inconsistent judgements are very common in our judiciary. Judgements are just opinions of the judges and not in accordance with the law of the land


Mecca Shivan
ஆக 22, 2025 19:40

ஒரே வழக்கு .. ஒரே நீதிமன்றத்தில் தினம் ஒரு விதமான தீர்ப்பு


Ramesh Sargam
ஆக 22, 2025 20:22

too many cooks spoil the broth. said when there are too many people involved in trying to do the same thing, so that the final result will not be good. அது போல நமது நீதிபதிகள்.


Kulandai kannan
ஆக 22, 2025 19:36

நாய் என்பது innocent animal, கோழி, ஆடு, மீன் எல்லாம் tasty animals. இதுதான் நாய் ஆர்வலர்களின் நிலைப்பாடு.


NARAYANAN
ஆக 22, 2025 19:33

நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராயாமல் தீர்ப்பு வழங்கி, அதை பின்னர் மாற்றுவது உச்ச நீதிமன்றத்தின் தரத்தை குறைக்கும் செயல். பார்லிமென்ட் அவையில் கூச்சல் இடுபவர்கள் எப்போது உச்சநீதி மன்றத்தின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று தெரியவில்லை.


தாமரை மலர்கிறது
ஆக 22, 2025 19:24

கடைசியாக சுப்ரிம் கோர்ட்டுக்கு புத்தி வந்தது பாராட்டத்தக்கது. அனைத்து நாய்களையும் அடைக்கவேண்டும் என்பது முட்டாள்தனமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. அநியாயம். அக்கிரமம். அட்டூழியம். இந்த பூமியில் தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஆசையில் மனிதன் எல்லைமீறி போனால், இயற்கை ஒரு நொடியில் உன்னை தரைக்கு கொண்டுவந்துவிடும். ஜாக்கிரதை. ஆடாதடா ஆடாதடா மனிதா. ரொம்ப ஆடினால், அடங்கிடுவ


Rajasekar Jayaraman
ஆக 22, 2025 18:55

சுப்ரீம் கோர்ட் தேவையான வழக்குகளை நிறுவையில் போட்டு தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது பல ஆயிரக்கணக்கான வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாய்களுக்கு சப்போர்ட் செய்வது தேவையற்ற வேலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை