உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், அங்கு மேல் முறையீடு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.

மறுப்பு

ஹரியானாவில் காங்கிரசின் ஓட்டுக்கள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்ததுடன், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.

மீண்டும்

இந்நிலையில், இன்று ஹரியானாவில் நிருபர்களிடம் ராகுல் கூறுகையில், '' ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் ஹரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதாரமில்லை

இதனை மறுத்துள்ள தேர்தல் கமிஷன் கூறியதாவது: ஹரியானாவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக யாரும் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. மோசடி என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 90 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்டில் 22 தேர்தல் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.தேர்தலின் போது ஒரு வாக்காளர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு இருந்தாலோ அல்லது ஒரு வாக்காளரின் அடையாளம் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டியது காங்கிரஸ் ஓட்டுச்சாவடி முகவர்களின் கடமை. ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் போது அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இருக்கும் வாக்காளர் பாஜவுக்கு ஓட்டுப் போடுவார் என்ற ராகுலின் கருத்து தெளிவில்லை. அவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டு இருக்கக்கூடாது.பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளால் வீட்டு எண் ஒதுக்கப்படாத வீடுகளுக்கு பூஜ்யம் என்ற வீட்டு எண்ணை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக., 1 முதல் அக்., 15 வரை பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணி நடக்கும் போது காங்கிரஸ் ஏன் ஒரு மேல்முறையீடு செய்யவில்லை. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Rajasekar Jayaraman
நவ 06, 2025 06:28

காங் கிராஸ் திருட்டு ஒட்டு எல்லாம் திரும்ப வெளியேற்ற பட்டது.


ஆரூர் ரங்
நவ 05, 2025 22:09

ஆனா ராகுலுக்கு கிடைத்த ஓட்டர் லிஸ்டில் மட்டும் எல்லா வாக்காளர்களும் கலர் போட்டோ. அதிசயம் ஆச்சர்யம். வேறெங்கும் நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.


தாமரை மலர்கிறது
நவ 05, 2025 21:31

ஒரு ஓட்டுக்கூட போலி ஒட்டு போட வாய்ப்பே இல்லை. டிஜிட்டல் வங்கி சேவை போன்று மிகவும் பாதுகாப்பான அமைப்பு தான் நமது தேர்தல் ஆணையம். உலகில் பல மேற்கத்திய நிறுவங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை மெச்சி பாராட்டி உள்ளன. இருப்பினும் ராகுல் பொய் குற்றசாட்டுகளை அள்ளிவீசுகிறார். ஆபத்தானவர். இவ்வளவு பெரிய தேசத்தில் பிரேசில் நாட்டு பெண்மணியை ஒத்த முகம் உடைய இந்திய பெண் இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை எள்ளி நகையாடும் ராகுலுக்கு தண்டனை கொடுத்தால், மற்றவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கும். இல்லையெனில் ஆளாளுக்கு பேச ஆரம்பித்து விடுவார்கள்.


Rajasekar Jayaraman
நவ 06, 2025 06:30

தண்டிக்க வழி தேட வேண்டும்.


மனிதன்
நவ 05, 2025 20:30

அப்பாவி மக்களுக்கு தெரியாமத்தானே இதெல்லாம் பண்ணியிருக்கீங்க... அவங்களுக்கு இந்த தில்லுமுல்லெல்லாம் தெரியாதே.. அப்புறம் எப்படி மேல் முறையீடு செய்வாங்க... நீங்க நல்லா பிளான் பண்ணிதானே இதையெல்லாம் பண்ணுறீங்க... ஆதாரம் வெளியிட்டாலும் உங்கள கைது பண்ண முடியாது, நீதிமன்றம் போக முடியாது, வழக்கு போட முடியாது, போட்டாலும் வழக்கு நிற்காது, தண்டனை கொடுக்க முடியாது, ஏன் எதிர்க்கட்சிகளே இல்லாமல் இருட்டுக்குள் அமர்ந்து இந்த சட்டத்தை போட்டீர்கள்...தில்லுமுல்லு பண்ணப்போறோம், மாட்டிக்கிட்டாலும் தப்பிக்கணும்னுதானே... ராகுலின் குற்றச்சாட்டை நீங்கள் நிராகரிக்காமல் இருந்தால்தான்அதிசயம்... அய்யா சாமிங்களா உங்க ரீலு எல்லாம் அந்து ரொம்ப நாளாச்சு....


V Venkatachalam, Chennai-87
நவ 05, 2025 19:52

காக்காய் கங்கு மூணு நாலு. ஆமா நான் பாத்தப்ப காக்காய்க்கு மூணு காலு..இதுக்கு ப்ரூஃப் தர முடியாது.


Saai Sundharamurthy AVK
நவ 05, 2025 19:46

சந்தேகமே கிடையாது. ராகுல்கந்தி அமெரிக்கா டீப் ஸ்டேட் மற்றும் பிபிசியின் அடியாள் தான்......! தேசத்துரோக வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


GMM
நவ 05, 2025 19:39

கோடிக்கணக்கில் வாக்காளர்கள். கோடி கணக்கில் வழக்குகள். இரண்டும் வெளிப்படை தன்மை கொண்டவை. ஒவ்வொரு நிகழ்வின் போதும் குறைபாடுகள் இருந்தால் திருத்தம் செய்ய முடியும். கண்காணிக்க, தணிக்கை செய்ய கட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள். மேல் முறையீடு தேர்தல் முடிவை ஏற்ற பின் செல்லாது. தேர்தல் தோல்வியை ஒப்பு கொள்ளாமல் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கும். ஒரு வழக்கின் தீர்வில் கூட நீதிமன்ற குறைபாடு இருக்கும். ராகுல் விமர்சிக்க முடியுமா? ராகுல் குற்றச்சாட்டு தேர்தல் குழப்பங்கள் உருவாக்கும் திட்டம். பலிக்காது.


SUBBU,MADURAI
நவ 05, 2025 19:09

Sardar Patel : 12 votes, Pandit Nehru : 1 vote Jawahar Lal Nehru was ed as PM because he was favourite to MK Gandhi. Sardar Patel was denied because he wasnt a Yes man SardarPatel was the first victim of Vote chori!


Rahim
நவ 05, 2025 18:43

அப்போ போலி வாக்களர் உருவான விஷயத்தில் உங்க தவறை ஒப்புக் கொள்கிறீர்களா மிஸ்டர் தேர்தல் கமிஷன் ,யாரும் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் உங்கள் தவறு தொடரலாமா ?


duruvasar
நவ 05, 2025 19:01

போலி வாக்காளர்களை உருவாக்குவதில் உடைந்து போன இண்டி கூட்டணி கைதேர்ந்தவர்கள். . திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.


Iyer
நவ 05, 2025 19:53

VOTE CHORI - நடந்து இருந்தால் மேல்முறையீடு செய்து இருக்கவேண்டும் என்றுதான் தேர்தல் கமிஷன் சொல்லியது அதற்க்கு அர்த்தம் - VOTE CHORI நடந்தது என்று இல்லை. உங்கள் வீட்டில் 25 லக்ஷ ரூபாய்கள் திருட்டுப்போனால் - நீங்கள் செய்யவேண்டிய முதல் காரியம் - போலீஸ் ஸ்டேஷன் சென்று FIR செய்வது அதைவிட்டுவிட்டு - நடுத்தெருவில் நின்றுகொண்டு என் வீட்டில் 24 லக்ஷம் திருட்டுப்போச்சு என்று கதறிக்கொண்டு இருந்தால் யாரும் நம்பமாட்டார்கள்.


ஆரூர் ரங்
நவ 05, 2025 17:59

500 போலி ஆட்கள் வாக்களிக்கும் போது காங்கிரஸ் பூத் ஏஜெண்ட் உற்சாக பானம் அருந்தப் போய்விட்டாரா?. கொஞ்சமாவது நம்பும்படியாக பொய் சொல்லுங்க. உண்மையாக இருந்தால் ஏன் வழக்குப் போடவில்லை?


மனிதன்
நவ 05, 2025 20:44

உங்க தேர்தல் கமிஷனின் ஆவணங்களில் உள்ளதை தான் ராகுல் வெளியிட்டார்...புரிந்ததா? இன்னும் இல்லையா?


ரங்
நவ 05, 2025 22:16

பாரதீய ஜனதா பிரேசில்ல இருந்து ஒரு பெண்ணை வரவழைச்சு ஹரியானால 200 தடவ வோட்டு போட வச்சுதாம்.அதுவும் எப்படியாம்....மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவ இருபது முப்பது கி.மீ தாண்டி தாண்டி போயி கியூ கியூவா கால் கடுக்க நின்னு வோட்டு போட்டுதாம்.அதுனால தான் காங்கீஸ் தோத்துடுச்சாம். (ஆமாம், அவ்வளவு தடவையும் அடையாள மையை அழிக்கிறது எவ்வளவுகஷ்டம்?..) மெய்யாலுமே ராகுல் ஸ்டெடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை