உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

வக்ப் என்பது, முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த சொத்துகளை, மதம் தொடர்பான நல்ல பயன்பாட்டுக்கு தானமாக வழங்குவது. ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை பறித்துக் கொள்வது வக்ப் சொத்தாக முடியாது. பல மாநிலங்களில், கோவில் நிலங்கள், கிராமங்கள் என, அனைத்தையும் வக்ப் சொத்தாக மாற்றியுள்ளனர். அரசு நிலங்களை வக்ப் சொத்தாக அபகரித்துள்ளனர். அரசு நிலங்கள், கிராமங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் அனைவருக்குமானது. அதற்கு வக்ப் வாரியங்கள் உரிமை கோர முடியாது. அதை மோடி அரசு அனுமதிக்காது.வக்ப் என்பது ஏழை முஸ்லிம்களின் நலனுக்கானது. திருடுவதற்காக அல்ல. இந்த மசோதா அந்த திருட்டை நிறுத்தும்; மசோதா சொத்துகளை பாதுகாக்கும். தொல்லியல் துறை சொத்துகள், பழங்குடியினர் நிலம், தனியார் நிலம் போல, வக்ப் சொத்துகளை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம். தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வக்புக்கு நன்கொடையாக வழங்க முடியும். மற்றவர்கள் நிலத்தையோ, அரசு நிலத்தையோ, வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது.இந்த மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஆனால், இந்த அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுமே தவிர, ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டோம். வக்ப் வாரியம் என்பது மத அமைப்பு அல்ல, அது ஒரு நிர்வாக அமைப்பு. அதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. மசோதா முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது.வக்பு சொத்துகள் தொடர்பான பதிவுகளுக்கு, கலெக்டர்களே பொறுப்பாளராக இருப்பர் என்பதில் என்ன தவறு உள்ளது. எது அரசு நிலம், எது தனியார் நிலம் என்பதை நிர்வகிப்பது கலெக்டர்களே. வழிபாட்டு தலங்கள் கட்டலாம். ஆனால், அரசு நிலத்தில் எப்படி கட்ட முடியும். அதனால், கலெக்டர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.இந்த மசோதா, பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, பலருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு பயந்தோ, அவர்களுடைய ஆதரவு தேவை என்றோ, ஓட்டு வங்கிக்காகவோ இந்த மசோதா தயாரிக்கப்படவில்லை.நீங்கள் மக்களை ஓட்டுகளாக பார்க்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இந்த மசோதா சட்டமானால், அதை சிறுபான்மையினர் ஏற்க மாட்டார்கள் என ஒரு எம்.பி., கூறினார். எந்த சட்டமாக இருந்தாலும், அது அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று எவரும் கூற முடியாது.இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K r Madheshwaran
மே 12, 2025 00:17

இதையெல்லாம் இன்னும் தெளிவாக அனைத்து தரப்பினருக்கும் தெறிந்து கொள்ள வழிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் மேலும் இதுபோன்ற சட்டத்தை விபரங்களோடு பரப்புரை விளக்க கூட்டம் துண்டு பிரசுரங்கள் தொலைக்காட்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியோடு பல வழிகளில் விளக்கப்படுதுவது மேலும் இதை திரித்து மாற்றி குழப்பி அவதூறாக பீஜேபி அரசுக்கு எதிராக ஆதாரமற்ற வகையில் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்து மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் நாட்டில் நிம்மதி தேவையற்ற பதட்டம் தவிர்க்கலாம்


Mahendran
ஏப் 04, 2025 11:05

கோபாலபுரம் கொத்தடிமையே மானத்தோடு வாழ கத்துக்குங்க சரியான சட்டம் இயற்றப்பட்டது


Mahendran
ஏப் 04, 2025 11:03

Good


venkatesan perumal
ஏப் 04, 2025 10:31

இந்திய அரசு


Ethiraj
ஏப் 04, 2025 08:36

Those who dont obey law can be sento Jail


INDIAN
ஏப் 03, 2025 22:08

முதலில் பிஜேபி காரர்கள் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் என்பதை உலகுக்கு நன்கு தெரியும். ஆனால் மற்றவர்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகார செயல் அல்லவா. இந்து மக்களை ஏமாற்றி குஷி படுத்த இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் மோடி அரசின் சட்டங்கள் நிலைக்காது.


Hindustani
ஏப் 03, 2025 19:27

Nobody questioned the Central Government when the same Act was amended twice. They relied on them. When similar step is taken, for the welfare of the public, we have to believe them.


Hindustani
ஏப் 03, 2025 19:18

இந்த சட்டம் ஏற்கனவே இரு முறை திருத்தப்பட்டது. அதை ஏன் ஒருவரும் எதிர்க்கவில்லை?


Hajamohaideen
ஏப் 03, 2025 14:15

மற்றவரின் சொத்துக்கு சட்டம் போட உங்களுக்கு முதலில் அதிகாரம் கிடையாது


Paramasivam
ஏப் 03, 2025 22:43

பாரதத்தில் இருக்கும் அனைத்து சொத்தும் பாரத குடியரசு தலைவருக்கு சொந்தமானது தான். அவரிடம் இருந்து‌ பட்டா பெற்று அனுபவித்து வருகிறோம்.


Rajarajan
ஏப் 03, 2025 06:38

சட்டரீதியாக, மிக சரியான பேச்சு. இந்தியாவில் இருக்க விருப்பமில்லையெனில், அவர்கள் வெளியேறுவதில் தடையில்லை என்றும் அறிவித்திருந்தால், அருமையாக இருந்திருக்கும்.


முக்கிய வீடியோ