உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு கிடையாது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு கிடையாது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி : “நாட்டில் பா.ஜ., இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு கிடைக்காது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

எச்சரிக்கை

இன்று, 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ஜார்க்கண்டின் பலமு மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:இட ஒதுக்கீடு பற்றி காங்., பேசுகிறது. அரசியலமைப்பில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த பிரிவும் இல்லை. எந்தவொரு மதத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. மஹாராஷ்டிராவில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, காங்., தலைவர்களிடம் உலமாக்கள் குழு கோரிக்கை மனு அளித்தனர். இதை பெற்ற காங்., தலைவர் ஒருவர், இதற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.முஸ்லிம்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு குறைக்கப்படும். இந்த விவகாரத்தில், ஜார்க்கண்ட் மண்ணில் இருந்தே ராகுலை எச்சரிக்கிறேன். அவர் மனதில் என்ன சதி திட்டம் இருந்தாலும் சரி, பா.ஜ., இருக்கும் வரை, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது.

ஊழல்

காங்., எப்போதுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராகவே செயல்படுகிறது.அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ராஜிவ், இந்திரா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க காங்., பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், 2014ல் மத்தியில், பா.ஜ., அரசு அமைந்ததும், பிரதமர் மோடி அதை உடனே செயல்படுத்தினார்.ஜார்க்கண்டில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. இதை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி, அனைவருக்குமான அரசை வழங்க பா.ஜ., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kantharvan
நவ 13, 2024 10:47

Aadharam ethatrum ??? Pulli viparam???


skv srinivasankrishnaveni
நவ 13, 2024 09:50

படிப்பே ஏறாத மக்குகஅப்படியே இந்த சலுகையால் மெடிக்கல் சீட்லேந்து எல்லாம் கிடைக்கும் ஆனால் நல்ல திறமை ஆர்வம் முயற்சி ஏதுமில்லாத கோடீஸ்வர மைனாரிட்டிகளுக்கு வாரி வழங்குறானுக இதுதான் நடைமுறைலேயே இருக்குங்க பெரிய்ய்ய ஹாஸ்ப்பிடள்ளே படிக்காத டாக்டர்கள் வச்சுண்டுட்டு பேஷண்ட்ஸ் உசுரோட விளையாடுறானுக


Dharmavaan
நவ 13, 2024 08:09

ஒதுக்கீடு மட்டுமே அல்ல. எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் இது சட்டத்தின் முன் சமத்துக்கு எதிரானது


GMM
நவ 13, 2024 08:06

சாதி இட ஒதுக்கீடு நீட்டிப்பு தவறு. மத இட ஒதுக்கீடு குற்றம். குற்றம் புரியும் கட்சிகள் தண்டிக்க பட வேண்டும். அரசியல் சாசனம் / சபை / நீதிமன்றம் மத இட ஒதுக்கீட்டை தடுக்க வேண்டும். சாதி, மத, மொழி மூலம் நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் கட்சிகள், அமைப்புகள் தடை செய்ய வேண்டும்.


N.Purushothaman
நவ 13, 2024 06:40

ராகுல் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது வெட்கக்கேடானது ......தன்னால் பிரதமர் ஆகா முடியாததால் நாட்டை எப்படியாவது துண்டாட நினைக்கும் இவரின் சதி ஒரு போதும் நிறைவேறாது ....


SUBBU,MADURAI
நவ 13, 2024 07:15

உங்களுக்கும் எனக்கும் இது புரிகிறது ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற நட்ட நடுநிலை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இது புரிய மாட்டேங்குதே?


Dharmavaan
நவ 13, 2024 08:13

ராகுல்கான் மட்டுமல்ல எல்லா இந்தி கூட்டணி கட்சிகளும் திருட்டு திமுக உள்பட .மத ரீதியான சலுகை கொடுக்கும் கட்சி தடை செய்யப்பட வேண்டும்


N.Purushothaman
நவ 13, 2024 11:54

என்ன செய்வது? கலிகாலத்தில் தீய எண்ணம் கொண்டவர்களின் கை ஓங்கி இருக்கும் என்பது விதி ....ஆக அதை இறைவன் தான் அதை சரி செய்ய வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 06:38

ஏற்கனவே இருக்கும் இடவொதுக்கீடு நிரந்தரமா ???? அம்பேத்கர் சொன்னது என்ன ????


SUBBU,
நவ 13, 2024 06:03

All India Ulema Muslims Board has sent a letter to INDI alliance with 17 demands. It includes Grant reprieve the 1992 blasts accused. Oppose Waqf bill 10% reservation to Muslims Donate 1000 Crore to Maharashtra Waqf Board. They will surely accept it. How many of us are aware of this practice of tax exemption based on religion? The Congress Brand of Secularism never ceases to amaze us


SUBBU,
நவ 13, 2024 06:01

All India Ulema Muslims Board has sent a letter to INDI alliance with 17 demands. It includes Grant reprieve the 1992 blasts accused. Oppose Waqf bill 10% reservation to Muslims Donate 1000 Crore to Maharashtra Waqf Board. They will surely accept it. How many of us are aware of this practice of tax exemption based on religion? The Congress Brand of Secularism never ceases to amaze us


Kasimani Baskaran
நவ 13, 2024 05:46

மிகச்சரியான கருத்து.


சமீபத்திய செய்தி