உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் வாரிய திருத்த புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 90-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் ஒன்றாக சேர்த்து நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, 'வக்ப் சொத்துக்களை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம்; ஹிந்து மத சொத்துக்களை நிர்வகிக்கும் குழுவில் பிற மதத்தை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க முடியுமா?' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. லட்சக்கணக்கானோரிடம் இருந்து கிராமங்கள் வக்ப் சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார் வந்தது. பல இடங்கள் வக்ப் சொத்தாக உரிமை கோரப்படுகின்றன. இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் உள்ளன . சட்டத்திற்கு முழு தடை விதிக்க மாட்டோம். தற்போதைய சூழ்நிலை மாறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தற்போதுள்ள சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியதுடன், அதுவரை புதிய நியமனங்கள் இருக்காது.வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் ஏழு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இச்சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களை மட்டும் விசாரிப்போம். 100 அல்லது 200 மனுக்களை விசாரிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. ஐந்து மனுக்களை தவிர மற்ற மனுக்கள் முடித்து வைக்கப்பட்டதாக கருதப்படும் என தெரிவித்ததுடன் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இதன் பிறகு மத்திய அரசின் பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் ஐந்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

venugopal s
ஏப் 18, 2025 06:16

ஏற்கனவே உள்ள சட்டங்களை மத்திய பாஜக அரசு பாரபட்சமின்றி நேர்மையாக நடைமுறைப் படுத்துவதில்லை. அதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குகிறது. மேலும் மத்திய பாஜக அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக மாறி வருகிறது!


sankaranarayanan
ஏப் 17, 2025 21:30

போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கே பாராளுமன்ற இடம் உச்ச நீதி மன்ற இடம் இவைகளெல்லாம் வக்பு வாரியத்து சொந்தம் என்றே அவர்கள் அறிக்கை விட்டாலும் சந்தேப்படுவதுற்கு நோன்றுமே.இல்லை என்றால் எல்லா எதிர்கட்சிகளும் என்னவோ அவர்களுக்கு கொடுமை இழைத்து விட்டதுபோன்று கூக்குரலிட்டு நாட்டை பிளவு படுத்தி அதில் சந்தோஷப்படுகின்றனர் முற்றிலும் இது தேச துரோகம்


SIVA
ஏப் 17, 2025 21:02

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மன்னர் கொடுத்த இடம் உங்களுக்கு வேண்டும் என்றால் அதற்கு முன்பு எங்கள் இந்து மன்னர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்கள் பாக்கிஸ்தான் , வங்கதேசம் என்று பல இடங்கள் எங்களுக்கு மீண்டும் வேண்டும் ...... பழைய வக்பூ வாரிய சட்டத்தில் கோர்ட்டுக்கு செல்ல முடியாது என்று ஒரு பாயிண்ட் உள்ளது. அது சரி என்றால் இந்த புதிய சட்டம் சம்பந்தமாகவும் யாரும் வழக்கு போட கூடாது ....


SUBBU,MADURAI
ஏப் 17, 2025 19:50

Hindus have property? YES. Sikhs have property? YES. Jains have property? YES. Christians have property? YES. Buddhists have property? YES. Parsees have property? YES. Then why only Muslims need a special law to manage that property? They dont Then why do they need the law? TO CAPTURE PROPERTY It is land Jihad.


Sivagiri
ஏப் 17, 2025 19:30

மத்திய அரசு வக்ப் வாரிய சட்டங்களை இயற்றி , இந்தியா முழுவதுமான வக்ப் வாரியங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தான் வைத்திருக்கும் பொழுது , ஹிந்து ஆலயங்கள் , மடங்கள் , தர்மஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் , மத்திய அரசு ஹிந்து அறநிலையத்துறை சட்டங்களை இயற்றி இந்தியா முழுவத்துக்குமான ஹிந்து கோவில்கள் , மாடாலயங்கள் , தர்மஸ்தாபனங்களை , தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியதுதானே . . . பல்வேறு பிரிவு , கிறித்துவ சர்ச்சுகளுக்கும் இது போல சட்டங்களை இயற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியதுதானே . . .


தமிழ்வேள்
ஏப் 17, 2025 21:33

அப்படி ஹிந்து கோவில்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டால் திருட்டு திராவிடம் போயிடும்..கிரிப்டோ ஒரு பயலுக்கும் வேலை இருக்காது. எல்லாவனும் ...கழுத்தில் துண்டு போட்டு முறுக்குவான்.. ஓகேவா?


Rasheel
ஏப் 17, 2025 18:42

கேட்பட வேண்டிய கேள்விகள் - வக்ப் மூலம் எத்தனை இலவச மருத்துவ மனைகள் கட்டப்பட்டுள்ளன? எதனை முஸ்லீம் ஏழைகளுக்கு இலவச உணவு கல்வி அளிக்கப்படுகிறது? எத்தனை முஸ்லீம் ஏழைகளுக்கு படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது? எத்தனை ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன? இவை அனைத்திற்கும் பதில் இல்லை.


Ramalingam Shanmugam
ஏப் 17, 2025 18:20

அப்படியென்றால் அரசு கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்துவல்லாத எவரும் கோவில்களில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.


spr
ஏப் 17, 2025 17:35

"இச்சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களை மட்டும் விசாரிப்போம். 100 அல்லது 200 மனுக்களை விசாரிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. ஐந்து மனுக்களை தவிர மற்ற மனுக்கள் முடித்து வைக்கப்பட்டதாக கருதப்படும்." - இந்த ஐந்து மனுக்களை ஏற்பதற்கு என்ன அடிப்படை ஒரு குடியரசில், மதச்சார்பின்மை இதுவரையில் கடைபிடிக்காமல் இருந்ததே அரசியல் சாசனப்படி குற்றம் என்று சொல்லவேண்டிய நீதிமன்றம் இப்படிஸ் சொல்வது மத்திய அரசின் இயலாமையைக் காட்டுகிறது இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து இந்து அறநிலையத்துறை வேண்டுமா வேண்டாமா என்பதற்கு ஓராயிரம் மனு போட்டால் அதனையும் நீதிமன்றம் விசாரிக்குமா


Kasimani Baskaran
ஏப் 17, 2025 17:08

அப்படியென்றால் அரசு கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்துவல்லாத எவரும் கோவில்களில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.


Nagarajan D
ஏப் 17, 2025 17:07

எப்படியோ அந்த விளங்காத நீதிபதிகளுக்கு இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு இன்னுமொரு வழக்கு கிடைத்தது. ஜாவ்வ்வ்வ்வு மாதிரி இழுப்பாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை