உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்கறை இல்லை!

அக்கறை இல்லை!

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் உலக தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டன. இதில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகள் கல்விக்காக கட்டப்பட்ட மூன்று பள்ளிகளை திறக்காமல், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பா.ஜ., அரசு பூட்டி வைத்துஉள்ளது. இது, டில்லி மக்கள் மீதான அக்கறைஇன்மையை காட்டுகிறது.ஆதிஷி, டில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி

உத்தரவை மீற முடியாது!

நீதிமன்ற உத்தரவுபடியே, டில்லி மதராஸி கேம்ப் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி, அரசு நிர்வாகம் எதுவும் செய்ய முடியாது. வெள்ள தடுப்பு நடவடிக்கை காரணமாக, அக்குடியிருப்புகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்த மக்களுக்கு மாற்று குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ரேகா குப்தா,டில்லி முதல்வர், பா.ஜ.,

துணை நிற்கும் ஐரோப்பா!

பஹல்காம் தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கு உள்ள பயங்கரவாத தொடர்புகள் பற்றியும், நம் நாட்டின் நிலைப்பாடு பற்றியும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தோம். இதை கேட்டறிந்த அந்நாடுகள், தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளன.புரந்தேஸ்வரி, லோக்சபா எம்.பி., பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jss
ஜூன் 09, 2025 08:53

ஆஹா ஆப் ஆப்பை சொருகிக்கொண்டது எதற்க்காக என்னும் சுயப் பரிசொதனையை செய்து கொள்ளவில்லை எனபது தெளிவாகிறது். உங்கள் ஆட்சியில் அரசு பள்ளிக்கூடங்களின் தரம் பற்றி ஒரு கமிட்டி போட்டுஙாராய வேண்டும். இதற்க்கு முன்பு அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து பாராட்டுகள் வாங்கப்பட்டன் எனபது வெட்ட வெளிச்சமாகியது.தனியார் பள்ளிகறை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கொள்ளை கூடங்கள். அதே போல்தான் டில்லியிலும். நீங்கள் ஆண்ட காலத்தில் எத்தனை தனுயார் பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்டது என்பதையும் சிறிது நினைவு கூறுங்கள்


முக்கிய வீடியோ