உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமெண்ட், சட்டசபைகளை குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் இருப்பது நல்லதல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.பார்லிமெண்ட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் இடையூறுகளால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர் போராட்டங்கள் மற்றும் குறுக்கீடுகள் காரணமாக அலுவல் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந் நிலையில், அகில இந்திய சபாநாயகர்கள் 2 நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று( ஆக.24) தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது; பார்லிமெண்ட், சட்டசபைகளை குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் செய்கிறது. பார்லிமெண்டில் குறைந்த அளவிலான விவாதங்கள் நடப்பது, தேசத்தை கட்டியெழுப்புவதை பாதிக்கும். ஜனநாயகத்தில் விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆனால், ஒருவரின் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சி என்ற பெயரில் அவைகளை செயல்பட அனுமதிக்காவிட்டால் அது நல்லதல்ல. நாடு அதை பற்றி சிந்திக்க வேண்டும்.எதிர்ப்பு எப்போதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதை சிந்திக்க வேண்டும். பார்லி.யில் அனைத்து விவாதங்களும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அந்தந்த சபைகளின் விதிகள் படி சபை நடக்கிறதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக கண்ணியத்தை இழந்த சபைகள் மோசமான விளைவுகளை சந்தித்தன. வாதங்கள் பாரபட்சம் அல்லாதவையாக இருக்க வேண்டும். விதிகள் படி அவையின் செயல்படுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து இங்கு ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.ஆட்சி மாற்றங்களின் போது ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தப்படவில்லை. நாட்டின் சுதந்திர போராட்டம் முக்கியமானது என்றால், சட்டமன்ற நடைமுறைகளை மதிப்பது முக்கியம். சபாநாயகர் பதவியின் கண்ணியம், மரியாதை ஆகியவற்றை அதிகரிக்க நாம் அனைவரும் பாடுபட இது ஒரு வாய்ப்பு. இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MARUTHU PANDIAR
ஆக 24, 2025 22:08

இங்கு மத்திய அரசுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கும் ஒயிட் காலர் பிரிவினை வாதிகள் , அர்பன் நக்சலைட்டுகள், டூல்கிட்டுகள், போராளிகள் மற்றும் மூளை மழுங்கடிக்கப் பட்ட, சிந்தனைத் திறன் அற்ற சில பல வாக்காளர்கள், வேலை வெட்டியை போட்டு விட்டு நடிகன் பின்னால் அலையும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எல்லோரும், தாங்கள் எரிமலை மீது அமர்ந்து கச்சேரி கேட்கிறோம் என்பதை மறந்து கிடக்கின்றனர். காலம் பூராவும் இப்படியே நிம்மதியான சோறு தண்ணி மற்றும் பாது காப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்ற தவறான நினைப்பில் மிதக்கின்றனர் .


MARUTHU PANDIAR
ஆக 24, 2025 22:00

இந்த நிலையில் இந்தியா தேர்தல் வழி ஒழுகும் ஒரு ஜனநாயக நாடாக இருப்பது அமெரிக்க போன்ற, நாம் வாழ்வது பொறுக்காத சக்திகளால் பேராபத்தை சந்திக்கும் நிலை உண்டாகிறது. அவர்கள் வட கொரியா பக்கம் தலை வைத்து படுப்பதில்லை. அவ்வளவு பயம். அணு சக்தி நாடான இந்தியாவும் அது போல் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும். அதற்கு ஜனநாயக முறை சரிப்படுமா அல்லது ராணுவ ஆட்சி தான் தீர்வா?


MARUTHU PANDIAR
ஆக 24, 2025 21:55

"தலைக்கு மேல் வளர்ந்து விட்ட சீனாவையோ அல்லது ரஷ்யாவையோ நினைத்த படி கை வைக்க முடியாது. அது முடிந்த கதை..அங்கு தேர்தலோ ஜனநாயகமா இல்லை. சர்வாதிகள் கட்டுப்பாட்டில். இந்தியாவும் அவர்கள் அளவுக்கு வளர்ச்சி அடைவதை தடுக்கா விட்டால் அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்து விடும் என்பதால் மேற்படி ஒற்றை அஜெண்டாவுடன் படு தீவிரமாக செயலாற்றி வருகிறது அமேரிக்கா"என்கிறார்கள். மூன்று பெரிய சக்திகளை சமாளிப்பது பெரிய சவால் என்று நினைக்கிறதாம்.


MARUTHU PANDIAR
ஆக 24, 2025 21:47

"இனி வருங்காலங்களில் பார்லிமென்டின் அவைகள் நடைபெற அனுமதிக்கவே கூடாது என்பது தான் அவர்களுக்கு அமெரிக்கா கொடுத்திருக்கும் அறிவுறுத்தல். மோடியை கீழே இறக்குவதற்கு சி.ஐ .ஏ. இங்குள்ளவர்களை வைத்து எந்த எல்லைக்கும் சென்று தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் படி உத்தரவாம். இந்தி எதிர்ப்பும், தேசிய நீரோட்டத்தில் கலக்க விருப்பமில்லாத தென் மாநிலங்கள், மத ஸ்தாபனங்கள் , அவற்றின் மூலம் பெரிய அளவிலான மத மற்றும் ஜாதி மோதல்கள், ரத்தக்களரிகள் , தேர்தலில் புகுந்து தில்லு முல்லு அரங்கேற்றுதல் ஆகியவையும் வரிசையாக தொடரலாம். 12 மாதங்களுக்குள் இவை அனைத்தின் மூலமும் மோடியை அகற்ற முடிய வில்லை என்றால் அவரையே "குறி"வைக்கவும் தயங்க மாட்டார்களாம்" இப்படி பரவலாக பேசப்படுகிறது.


MARUTHU PANDIAR
ஆக 24, 2025 21:34

"இது சி.ஐ.ஏ வின்டீப் ஸ்டேட் நடவடிக்கைகளில் ஒன்றாகும். எதிர் கட்சி எம்பிக்கள் அநேகமாக அமெரிக்காவிடம் விலை போய் விட்ட நிலையில் ஆளும் கூட்டணி எம்பிக்களிடையேயும் பிரிவினையை தூண்டி, ஆசை காட்டி ஒரு 37 எம்.பி க்களை கூட்டணியிலிருந்து விலகச் செய்வது அவர்கள் நோக்கம் . இது வெறும் கட்டாய வரி விதிப்பு மட்டும் அல்ல. பொருளாதார பாதிப்பை உண்டாக்கி அது இந்திய அரசின் கவனத்தை தாங்கள் விரும்பிய படி திசை திருப்பிய படியே வைப்பதற்கு தான் . மோடியை கீழே இறக்குவது அவர்களின் டார்கெட்".என்று பரவலாககருதப் படுகிறது


மனிதன்
ஆக 24, 2025 20:32

ஆமா,நீங்கல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்கள் போட்டும் , விதவிதமாய் பொய் சொல்லிக்கொண்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஒட்டு திருட்டும், ED, CBI போன்றமைப்புக்களைவைத்து, பொய் வழக்கு போடுவதுமாக இருந்தால் எதிர்கட்சிகளும், மக்களும் அமைதியாக போய்விட வேண்டும்? அப்போ உங்களுக்கு சுகமா இருக்கும்?....


V Venkatachalam
ஆக 24, 2025 20:03

அவை நடவடிக்கைகளை தடுப்பவர்களை குண்டு கட்டா தூக்கி வெளியில் போட முடியாதா? அப்படி போட முடியாவிட்டால் ராணுவத்தை பார்லிமென்ட் வளாகத்தில் இறக்கி விடுங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2025 20:02

தப்பு ஆளும் பாஜக மற்றும் அதன் ஜாலூரா சபாநாயகர் மேலதான் ..... கூச்சல்ன்னு ஆரம்பிச்சாலே வெளியே அனுப்பிரனும் .....


திகழ்ஓவியன்
ஆக 24, 2025 19:21

கள்ள வோட்டு போட்டு வெற்றி வாங்கி மினாரிட்டி அரசு


MARUTHU PANDIAR
ஆக 25, 2025 04:02

உனக்கு நிரந்தரமாக 200, பிரியாணி, குவாட்டர் எல்லாம் கிடைக்குது போல. தேர்தலுக்கு முன் பல நூறு கிறுக்கல்கள்/கிறுக்கன்கள் சாரி ஓவியன்கள் நிச்சயம் பார்க்கலாம் .


Gopal
ஆக 24, 2025 18:34

அந்த தறுதலை எம்பி களின் சம்பளத்தை பிடிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை