உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதையுமே செய்யவில்லை!

எதையுமே செய்யவில்லை!

பாக்., உடன் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன், அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருக்க வேண்டும். அது போல, பார்லி., சிறப்பு கூட்டத்தொடரையும் நடத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு தீவிரமான பிரச்னை. ஆனால், இதில் எதையுமே பா.ஜ., அரசு செய்யவில்லை.சித்தராமையாகர்நாடக முதல்வர், காங்கிரஸ்

ராகுல் அறைகூவல் ஏன்?

பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும் போது, ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அதன் பக்கமே எட்டி பார்ப்பதில்லை. சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் தற்போது அறைகூவல் விடுப்பது ஏன்? இதை புரிந்து கொள்ள முடியவில்லை.ராஜிவ் சந்திரசேகர்முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

பயங்கரவாதிகள் எங்கே?

பஹல்காம் தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த தாக்குதலை நடத்திய ஐந்து பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை. அப்படி இருக்கையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வெற்றி என எப்படி கூற முடியும்? இதற்கு யார் பொறுப்பு?பூபேஷ் பாகேல்சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
மே 14, 2025 19:57

நக்கீரன் சிவனாரைப் பார்த்து கூறியது போல "" புலவர்–க்கு பொய்யுரை தேவையில்லை"" இந்தளவுக்கு பாஜகவையும் பிரதமரையும் சாடும் ""சித்தம் கலங்கிய ராமையா தயவு செய்து தனது இந்துப் பெயரை நீக்கிவிட்டு ஞானஸ்னானம் செய்து பெற்ற சொந்த கிறிஸ்துவ பெயரில் பேசட்டும், குறைகள் சொல்லட்டும். ஹூம், அவருக்கு வாக்களித்த இந்துக்கள் தான் ஏமாளிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை