உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடகங்களுக்கு நோட்டீஸ்?: மத்திய அரசு மறுப்பு

ஊடகங்களுக்கு நோட்டீஸ்?: மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செய்தி ஒளிபரப்பில், உருது மொழியை அதிகளவு பயன்படுத்தியது தொடர்பாக ஹிந்தி ஊடக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ், சில ஹிந்தி ஊடகங்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 'உங்கள் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தி நிகழ்ச்சிகளில் அதிகளவு உருது மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பார்வையாளர் புகார் அளித்துள்ளனர். உங்களின் நடவடிக்கை விதிமுறைகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது' என, குறிப்பிடப் பட்டிருந்தது. இதுகுறித்து பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு கூறுகையில், ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் அப்பிரிவு வெளியிட்ட பதிவில், 'ஹிந்தி ஊடக நிறுவனங்களில் ஒளிப்பரப்பான செய்திகள் தொடர்பாக பார்வையாளர் ஒருவர் அளித்த புகாரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியது மட்டுமே எங்களது பணி. இது, அமைச்சகத்தின் உத்தரவு அல்ல' என, குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
செப் 22, 2025 12:11

வேலூர் மாவட்டம் கிளை விஷாரத்திற்குள் நுழைந்து பாருங்கள் அங்கு தெரு பெயர்கள்கூட தமிழில் பார்க்கமுடியாது.என்னகு பார்த்தாலும் உருது மொழி நோற்காதீசுகள்தான் ஒட்டப்பட்டிருக்கும். தேர்தல் நேரஙகளில் கூட உருது வில் தான் விளமபரம் இருக்கும். அது ஒரு குட்டிபாகிஸ்தான். அதே ஹைதராபாத் சார்மினார் இடம் கூட அப்படி தான்.


KOVAIKARAN
செப் 22, 2025 08:40

அவ்வாறு பத்திகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றால், தமிழகத்தில், சாராய ஆட்சிக்கு ஜால்ரா அடித்து அவர்களின் செய்திகளை மட்டுமே முக்கியத்துவம் - அவைகள் பெரும்பாலும் தேசத்திற்கு எதிரான மற்றும் பொய் செய்திகளே - மிகைப்படுத்தி வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு தினமும் நோட்டீஸ் கொடுக்கவேண்டி வரும்.


Kanns
செப் 22, 2025 08:25

Ban Use of Foreign Invader Languages Except Intrntl English esp. Fundamentalist/ AntiSecular Arabic, ArabParsi& Persian-CrossUrdu. Throw Out their Supporters


Barakat Ali
செப் 22, 2025 06:09

கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், நாட்டு நலன் இவற்றுக்கு எதிராகச் செயல்படும் ஊடகங்களுக்கு கடிவாளம் தேவையே .....


புதிய வீடியோ