உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் என்.ஆர்.ஐ., திருவிழா; வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

ஒடிசாவில் என்.ஆர்.ஐ., திருவிழா; வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர் : ''ஒடிசாவில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா நடக்க உள்ளது. இது, மாநிலத்தின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்பும்,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.ஒடிசாவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் திருவிழா, இந்த முறை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இந்த மூன்று நாள் திருவிழா இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில், கொனார்க்கில் உள்ள சூரியக் கோவில் ஆகியவற்றில் நேற்று தரிசனம் செய்தார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த திருவிழாவில் பங்கேற்க வருகை தரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், புரி மற்றும் கொனார்க் கோவில்களை நிச்சயம் பார்க்க வேண்டும். இந்த திருவிழா, நம் நாட்டின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக ஒடிசாவுக்கு அமைந்துள்ளது' என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜன 08, 2025 06:00

வாவ். சுற்றுலா மேம்படும். பண்டைய காலத்தில் நாம் அறியாத எத்தனையோ தொழில் நுணுக்கங்கள் இருந்தன - அவற்றில் முக்கியமானது காலக்கணிதம். அதை சூரியனார் கோவிலில் தேர்ச்சக்கரத்தில் செதுக்கி வைத்து இருக்கிறார்கள். புரி ஜெகந்நாதர் கோவில் பிரமிக்க வைக்கும் கலை நயத்துடன் கட்டப்பட்ட கோவில். வாழ்நாளில் ஒருமுறையாவது போய் வருவது சிறப்பு.


புதிய வீடியோ