உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தாக்குதலில் ஹீரோவான என்.எஸ்.ஜி., கமாண்டோ கஞ்சா வழக்கில் கைது

மும்பை தாக்குதலில் ஹீரோவான என்.எஸ்.ஜி., கமாண்டோ கஞ்சா வழக்கில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்:மும்பை பயங்கரவா த தாக்குதலின் போது, நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி சண்டையிட்ட கமாண்டோ வீரர், 200 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர் ஒருவர், போதை பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பிடித்து கொடுத்தால், 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், போதை பொருள் தடுப்பு போலீசாரும் இணைந்து, 'ஆப்பரேஷன் காஞ்ஜனே' என்ற பெயரில் கடந்த இரண்டு மாதங்களாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ராஜஸ்தானின் சுரு பகுதியில் பஜ்ரங் சிங் என்ற தேசிய பாதுகாப்பு படை முன்னாள் வீரரை, 20 0 கிலோ கஞ்சாவுடன் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இது குறித்து போலீஸ் ஐ.ஜி., விகாஸ் குமார் கூறியதாவது: பஜ்ரங் சிங், 10ம் வகுப்பு வரை படித்துள்ளா ர். பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிஷா, மேற்கு வங்க எல்லைகளில் பணியாற்றி உள்ளார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை அறிந்த அதிகாரிகள் அவரை என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்தனர். அதில், கமாண்டோவாக பஜ்ரங் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 2008ல் மஹாராஷ்டிராவின் மும்பையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியபோது, மிக சிறப்பாக செயல்பட்டு, பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். மக்கள், அவரை ஹீரோவாக போற்றினர். க டந்த 2021ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் அரசியலில் ஈடுபட்டார். அதில் ஜொலிக்க முடியாததால், போதை பொருள் கடத்தலில் பஜ்ரங் சிங் இறங்கினார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய அவரது அனுபவம் காரணமாக, தெலுங்கானா மற்றும் ஒடிஷாவில் இ ருந்து ராஜஸ்தானுக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் நாட்டில் உள்ள கஞ்சா கடத்தல் வலையமைப்பில் முக்கிய நபராக மாறிய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
அக் 04, 2025 10:07

இவரைப் போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கு திருட்டு தேசவிரோத கும்பலை கருவறுக்கும் வேலையை தரலாம்..


Kasimani Baskaran
அக் 04, 2025 07:21

வேலை இல்லை என்பதாலா அல்லது எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு இந்த கேவலத்தை செய்தாரா என்று ஆராய வேண்டும்.


Nanchilguru
அக் 04, 2025 07:06

திறமையானவர்கள் தயவு செய்து தவறான பாதைக்கு செல்ல வேண்டாம். இந்த திருநாட்டில் உங்கள் திறமைகளை நிரூபிக்க பல வழிகள் உள்ளன


N Annamalai
அக் 04, 2025 06:59

சோகம் .ஓய்வு பெற்றபின் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கலாம் .ஏன் என்றால் அவர்கள் முழு பயிற்சி பெற்றவர்கள் .திசை மாற வாய்ப்பு உண்டு .இல்லை மாநில காவல் துறை அவர்களை பணியில் இணைத்துக்கொள்ளலாம் .நன்கு யோசிக்க வேண்டிய விஷயம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை