உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை - ஒருவர் கைது

நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை - ஒருவர் கைது

ராய்ப்பூர் : உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டிஸ்கரில் நடந்துள்ளது.உத்தர்கண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த பெண், சட்டிஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 ம் தேதியன்று பணி முடிந்து அருகே உள்ள விடுதிக்கு சென்றுக்கொண்டிருந்தார். அதன்பிறகு பணிக்கு வரவில்லை. மாயமானார். இது குறித்து அந்த நர்ஸின் சகோதரி , போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆக. 08 ம் தேதி பிலாஸ்பூரில் உள்ள திப்திதா என்ற பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் காணாமல் போன நர்ஸ் என்பது தெரியவந்தது.இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திரா என்ற கூலி தொழிலாளியை பரேலி நகரில் வைத்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் நர்ஸை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.சமீபத்தில் மேற்குவங்கம் கோல்கட்டாவில் இளம் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பரபரப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் நர்ஸ் கொல்லப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Indian
ஆக 16, 2024 18:48

என்னடா இது , வடக்கே எங்க பார்த்தாலும் ஒரே கற்பழிப்பா இருக்கும்


அப்பாவி
ஆக 16, 2024 17:52

கோட்டையில்.கொடியேத்தி பெண்களுக்கு பாதுகாப்பு குடுப்போம்னு முயங்குவோம்.


Raman
ஆக 16, 2024 06:14

சட்டம் வெறுப்பட்டமா இருக்கும் வரை இது தொடரும் உடனே ஒரு கை ஒரு கால் வெட்டபடும்னு சட்டம் சொண்டு வா பிறகு பார். அரசும் சட்டமும்


Kasimani Baskaran
ஆக 16, 2024 05:56

இது போன்று இரவு நேரங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாக பயணிக்க சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவமனையே செய்வதுதான் சிறந்த அணுகுமுறை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை