மேலும் செய்திகள்
பீட்ரூட் அல்வா
25-Aug-2024
குழந்தைகள் பள்ளி முடிந்து, மாலை வீட்டுக்கு வந்தால் நொறுக்குத் தீனி கேட்டு அடம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். சாக்லேட், சிப்ஸ் போன்ற உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் தின்பண்டங்களை கொடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாழாக்குவதற்கு பதில், அவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் சிற்றுண்டிகளை, வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். இதை தயாரிப்பது கஷ்டமே இல்லை.செய்முறை:முதலில் அடி கனமான பாத்திரத்தில் பயத்தம் மாவை போட்டு, பச்சை வாசம் போகும் வரை நெய் விட்டு கிளற வேண்டும். எந்த அளவுக்கு நெய் சேர்க்கிறோமோ, அந்த அளவுக்கு இனிப்பு உருண்டை சுவையாகவும், நறுமணமாகவும் இருக்கும்.பச்சை வாசம் போன பின், பயத்த மாவில் சர்க்கரை பொடியை போட்டு கலக்க வேண்டும். ஏற்கனவே நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, பாதாம், வெண்ணெயை போட்டு, நன்றாக கிளற வேண்டும். ஏலக்காய் பொடியை போட வேண்டும். விருப்பம் இருந்தால் குங்குமப்பூ சேர்க்கலாம். இந்த கலவையை சிறு, சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். ஆறிய பின் பரிமாறலாம். சுவையான, நறுமணமான இனிப்பு உருண்டையை, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். செய்வதும் எளிது.செய்முறை:அடி கனமான வாணலியில், ஒரு கப் நெய்யை ஊற்றி காய்ச்சி கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு முந்திரியை போட்டு, வறுத்து கொள்ள வேண்டும். அதன்பின் கோதுமை மாவை போட்டு மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளற வேண்டும். இந்த கலவையில், கால் கப் நெய் ஊற்றி கிளறுங்கள். அதன்பின் அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியை கீழே இறக்கி, முந்திரி, ஏலக்காய், சர்க்கரை பொடியை போட்டு நன்றாக கலந்து, தேவையான அளவில் உருண்டை பிடிக்க வேண்டும். கோதுமை இனிப்பு உருண்டை தயார். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றதாகும்.பயத்தமாவு லட்டுதேவையான பொருட்கள் பயத்தமாவு - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் (பொடித்தது) நெய் - இரண்டு கப் வெண்ணெய் - தேவையான அளவு ஏலக்காய் - எட்டு உலர்ந்த திராட்சை - சிறிதளவு பாதாம் - அரை கப் முந்திரி பருப்பு - ஒரு கப்கோதுமை உருண்டைதேவையான பொருட்கள் கோதுமை மாவு - 4 கப் சர்க்கரை பொடித்தது - 4 கப் ஏலக்காய், முந்திரி, உலர்ந்த திராட்சை - தேவையான அளவு - நமது நிருபர் -
25-Aug-2024