உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா கூட்ட நெரிசல் சம்பவம் : கலெக்டர், எஸ்.பி., டிரான்ஸ்பர்

ஒடிசா கூட்ட நெரிசல் சம்பவம் : கலெக்டர், எஸ்.பி., டிரான்ஸ்பர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., இருவரையும் டிரான்ஸ்பர் அளித்து ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகந்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. 3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து ஒடிசா முதல்வர் மோகன் மஜி, புரி மாவட்ட கலெக்டர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் மற்றும் எஸ்.பி., வினீத் அகர்வால் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.இது தொடர்பாக முதல்வர் மோகன் மஜி பதிவிட்டுள்ளதாவது:துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்தியாவின் மிக முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான புரி ஜெகந்நாதர் கோவிலில், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இதனால் அடிக்கடி பாதுகாப்பு பிரச்சினைகள் எழுகின்றன. வரும் திருவிழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டம் கட்டுப்பாட்டுக்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி., பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், தங்கள் பணியில் அலட்சியமாக இருந்ததை குற்றம்சாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நானும் எனது அரசும் அனைத்து ஜெகந்நாதர் பக்தர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். சாரதாபலியில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் இந்த ஆழ்ந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மகாபிரபு ஜெகந்நாதரிடம் பிரார்த்திக்கிறோம்.இவ்வாறு மோகன் மஜி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூன் 30, 2025 07:09

அப்பாடா. டிரான்ஸ்ஃபர் செய்து நீதி வழங்கிட்டாங்க.


சிட்டுக்குருவி
ஜூன் 29, 2025 18:38

இது நாட்டில் அன்றாட நிகழ்வாகிவிட்டது .தினமும் தினமலரை திறக்குமுன் வேண்டுவது இன்று ஒருநாள் வெட்டிக்கொலை ,கொலை ,கொள்ளை ,பெண்வன்கொடுமை ,கூட்டநெரிச்சல் உயிரிழைப்பு ,பயங்கர சாலைவிபத்தினால் உயிரிழைப்பு போன்ற செய்திகலில்லாமல் இருக்காதா என்றுதான் .ஒரு தவறு நடக்கும்போது அதேமாதிரி சூழ்நிலை உருவாகும்போது அந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நமக்கு பாடமாக அமையவேண்டும் .இதை மக்கள் ,மாநில ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளாதது ஏன் .அதிகாரிகளை மாற்றுவது அதற்க்கு தீர்வாகுமா ?ஒருசில பெருந்திரளாக ஏற்படும் குற்றங்களை Death due to mass events இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் .அதற்கென்று சட்டவடிவமைப்பு, விதிமுறைகளை கொண்டுவந்து மதிய அரசு காவல் துறையும் தனியாக விசாரித்து காரணமானவர்களை இரட்டிப்பு தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும் .அதுதான் தீர்வாகும் .தடுப்பாகும் .


J.Isaac
ஜூன் 29, 2025 16:37

மக்களுக்கு ஒழுக்கம் இலலயென்றால், கலெக்டர், எஸ்.பி என்ன செய்வார்கள்? ஆன்மீகம் , ஒழுக்கம், மனிதநேயம், பிறர் நலன், நன்னடத்தை, நல்லெண்ணத்தை உருவாக்க தானே.


புதிய வீடியோ