உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்

கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்

மூணாறு:கேரள, தமிழக மாநில எல்லைகளான இடுக்கி, தேனி மாவட்டங்களை இணைப்பதாக கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் கொழுக்குமலை அமைந்துள்ளது. இப்பகுதிக்கு சூரியநல்லி வழியாக மட்டுமே செல்ல முடியும். கொழுக்குமலையில் நுரை போன்று தவழும் மேகங்களுக்கு இடையே சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சியையும் அஸ்தமனத்தையும் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வதுண்டு. சூலியநல்லி - கொழுக்குமலை இடையே 12 கி.மீ., தூரம் கரடு, முரடான ரோடு என்பதால் ஜீப்புகளில் மட்டும் செல்ல முடியும். ஒரு ஜீப்பில் ஆறு பேர் பயணிக்க கட்டணம் ரூ.3ஆயிரம். அதிகாலை 4:00 முதல் மாலை 5:00 மணி வரை செல்லலாம். தகுதி சான்று அவசியம் கொழுக்குமலைக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட ஜீப்புகளுக்கு தகுதி சான்றுகள் வழங்கி பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அவை குறிப்பிட்ட கால அளவில் உடும்பன்சோலை இணை போக்குவரத்து துறை அதிகாரி தலைமையில் ஆய்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக டிரைவர்கள் மது அருந்தியதை கண்டறிய 'பிரீத் அனலைசர்' கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. அதிகாரிகள் கூறியதாவது: கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டதால் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர் ஆய்வு மூலம் மது அருந்துவதை டிரைவர்கள் பலர் கைவிட்டனர். நல்ல வருவாயும் கிடைக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை