உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் முதலைகள் ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி

முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் முதலைகள் ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி

போபால்: மத்திய பிரதேசத்தில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டிற்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள், அங்கு மூன்று முதலைகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் தொழிலதிபராக உள்ளவர் ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். பா.ஜ., நிர்வாகியான இவர், 2013 - 18 வரைஎம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார்.

சோதனை

தன் நண்பரும், முன்னாள் கவுன்சிலருமான ராஜேஷ் கேஷர்வானி உடன் சேர்ந்து, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ஹர்வன்ஷ் சிங் செய்து வருகிறார். இருவரும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஹர்வன்ஷ் மற்றும் ராஜேஷுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இருவருக்கும் சொந்தமான இடங்களில் நடந்த சோதனை, நேற்று நிறைவடைந்தது. விசாரணையில், ஹர்வன்ஷ் 155 கோடி ரூபாயும், ராஜேஷ் 140 கோடி ரூபாயும் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஹர்வன்ஷ் சிங் வீட்டில் நடந்த சோதனையின் முடிவில், 3 கோடி ரூபாய் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 19 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன. அவர் வீட்டு தோட்டத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு சிறிய குளத்தில், மூன்று முதலைகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சட்டவிரோதமாக முதலைகள் வளர்ப்பது தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.அவர்கள் வந்து முதலைகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். பினாமி பெயரில் வாங்கி, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெளிநாட்டு கார்களை ராஜேஷ் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

அவர் வீட்டில் உள்ளவர்கள் பெயரில் கார்கள் பதிவு செய்யப்படாததால், இதுகுறித்து போக்குவரத்து துறையிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருவர் வீட்டிலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkateswaran Rajaram
ஜன 11, 2025 13:33

இவர் அடிக்கடி எதிர்ப்பவர்களை கொலை செய்து முதலைக்கு தீனியாக போட்டு கொலையை மறைத்திருப்பார் என தோன்றுகிறது


N Sasikumar Yadhav
ஜன 11, 2025 11:10

கோபாலபுரத்தில் சோதனை செய்தால் விஞ்ஞானரீதியான ஊழல்ச்செய்ய பயிற்சி கொடுத்த ஊழல்முதலை நிறைய கிடைக்கும்


sundararajan
ஜன 11, 2025 10:00

கூவத்தில் இருந்து முதலைகளைக் கைப்பற்றி நமது திராவிடியாஸ் ,வடக்குத் திருடர்களுக்கு அனுப்பிருப்பார்கள் போல


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 09:53

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வெறும் ஒரு MLA வே இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார் என்றால் MP க்கள் எவ்வளவு அடித்திருப்பார்கள். "பார் நாங்கள் எங்கள் கட்சி MLA வா இருந்தாலும் விட மாட்டோம்" னு காட்டறதுக்காக, பாஜக இப்படி ஒரு ட்ராமா போடுகிறது.


அப்பாவி
ஜன 11, 2025 09:00

முதலைக்கறி சாப்புடலாமா?


அப்பாவி
ஜன 11, 2025 08:59

மாட்டுனவங்க குட்டி முதலைகள்.


N.Purushothaman
ஜன 11, 2025 08:48

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது சம்மந்தப்பட்டவர்கள் அவர்களின் அசையா சொத்துக்களை அரசின் கருவூலத்தில் அடமானம் வைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்....எம் எல் ஏ வாக இருக்கும் காலத்தில் அந்த சொத்துக்களை அவர்கள் அனுபவிக்கலாம் ..ஆனால் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் .... அரசியலை சேவை என்கிற நோக்கத்தில் இருந்து தொழிலாக ஆற்றி தாய் வியாபாரமாக்குகின்றனர் ...இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் ...


BALACHANDRAN
ஜன 11, 2025 07:31

ஒரு வகையில் இந்த அரசாங்கத்தை பாராட்ட வேண்டும் ஆளுங்கட்ச்சியாக இருந்தாலும் இது தொடரும் என்றுநிரூபித்து உள்ளார்கள் இந்த முதலைகளை எதற்கு வளர்க்கிறார்கள் அதனால் என்ன பிரயோஜனம்


nisar ahmad
ஜன 11, 2025 09:22

தம்பி ரொம்ப பாராட்டாதீங்க தர வேண்டிய பங்க சரியா கொடுத்திருக்க மாட்டாங்க அதான் ஆட்சி வாசிங்மெஷின் ஆட்சி பல ஆயிரம் கோடி கொள்ளைடித்தவர்களை தன் கட்சியிலும் கூட்டனியிலும்வைத்திருக்கும் அரசு நடக்கிறது.


abdulrahim
ஜன 11, 2025 18:22

அப்படின்னா இப்போ பாஜக ஆளும் மாநிலங்களின் அத்தனை அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்த சொல்லுங்க பார்ப்போம் ...


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:24

பகுத்தறிவு மன்னர்கள் - மொத்த பாஜகவும் இப்படித்தான் என்று ஒப்பாரி வைப்பார்கள். நடவடிக்கை எடுத்து அவர்கள் கண்ணுக்கு தெரியாது.


Kalyanaraman
ஜன 11, 2025 06:57

பாரபட்சமில்லாமல் தனது கட்சிக்காரர்களாக இருந்தாலும் வருமான வரி சோதனை நடத்தியது பாராட்டுக்குரியது. பாரதத்தில் பிஜேபிக்கு நிகராக வேறு எந்த கட்சியும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை