உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புறக்கணித்த ஒமர் அப்துல்லா : அதிருப்தி வெளியிட்ட துணை நிலை கவர்னர் - துவங்கியது மோதல்:

புறக்கணித்த ஒமர் அப்துல்லா : அதிருப்தி வெளியிட்ட துணை நிலை கவர்னர் - துவங்கியது மோதல்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை முதல்வர் ஒமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது.இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியமாநாடு கட்சி,காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.பதவியேற்றதுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். அத்தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலும் அளித்தார்.

துவங்கியது மோதல்

இந்த சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் என்ற முறையில் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. ஆனால் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த துணை நிலைகவர்னர் கூறியது, தற்போதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தான் அதனை கொண்டாடுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலமாக மாறினால் அந்த நாளையும் கொண்டாவோம்.யூனியன் பிரதேச முதல்வராக பதவியேற்று கொண்டு, அதன் உருவான தினத்தை முதல்வர் ஒமர் அப்துல்லா புறக்கணித்தது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இரட்டை தன்மை பிரதிபலிப்பதாக உள்ளது என விமர்சித்து பேசினார்.மாநில அந்தஸ்து கோரி அதற்கான முயற்சியை முன்னெடுத்து பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தி வரும் ஒமர் அப்துல்லா, யூனியன் பிரதேச தினவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வருவதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K V Ramadoss
நவ 01, 2024 18:00

அருமையாக ஆரம்பித்த ஒமர் அப்துல்லா முதல் தடவையாக தடுக்கி விழுந்திருக்கிறார்.


vijai
நவ 01, 2024 11:19

நிறைய தொந்தரவு இருக்கு


ஆரூர் ரங்
நவ 01, 2024 10:57

பாரதம் அமெரிக்காபோல ஃபெடரல் எனும் ஐக்கிய நாடல்ல. இங்கு மத்திய அரசு மட்டுமே உண்டு. மாநில அரசுகள் அதன் தற்காலிக கிளைகள் மட்டுமே. எந்தக் கிளையையும் பிரிப்பதும் புதிதாக உருவாக்குவதும் மத்திய அரசின் ஏகபோக உரிமை. மாநில கடமைகள் என்றுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது. மாநில பிறப்புரிமை என்று எதுவுமில்லை. அரசியல் சட்டம் பிடிக்காவிட்டால் ஆப்கான் அல்லது பாகிஸ்தானுக்குப் போய் விடு.


rajan
நவ 01, 2024 10:48

பாகிஸ்தானை அழித்து காட்டட்டும்


Dharmavaan
நவ 01, 2024 09:19

இதற்கெல்லாம் மூல காரணம் உச்ச நீதி ஆளுநர்களை கேவலப்படுத்தியதே .இடதுசாரி கொலீஜியத்தின் விளைவு .இந்த முறை நீக்கப்பட வேண்டும் மோடி துணிய வேண்டும் இல்லையேல் நாடு துண்டாகும் சமீபத்திய சந்திரா சூட் பெடரல் பேச்சு பிரிவினைவாதம் ஊக்குவிக்கிறது மத்திய அரசை பலவீனமாக்குகிறது பிரிவினை ஆதரிக்கிறது இவர்களை இம்பீச் செய்ய வேண்டும்


rajan
நவ 01, 2024 10:51

இதற்கெல்லாம் மூல காரணம் உச்ச நீதி ஆளுநர்களை கேவலப்படுத்தியதே நீர் உண்மையிலேயே தர்மவானாக இருந்தால் யார் அந்த உச்சநீதி என்பதை வெளிப்படையாக சொல்லும்.


Rpalnivelu
நவ 01, 2024 08:58

மாநில அந்தஸ்தெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீங்க. முடிந்தவரை இவர்களுக்கு தொந்தரவு கொடுங்க. கொள்ளை/பிரிவினை வாதம்/தேச துரோகம்/மத சார்பு இவர்களின் கூட பிறந்தது.


N.Purushothaman
நவ 01, 2024 07:17

மாநிலமா மாத்திட்டா மட்டும் கொண்டாடிடுவாரா ?


Kasimani Baskaran
நவ 01, 2024 05:40

ஊழலில் நோபல் பரிசு பெற்ற குடும்பம். சிறப்பு அந்தஸ்தை வைத்து மாநிலத்தை மொட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இன்று அது நடக்கவில்லலை என்ற வருத்தத்தில் மாநிலமாக வந்தாலாவது பணம் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள் போல. தேசப்பற்று இல்லாத இவர்களை நாட்டை விட்டு துரத்தினால் கூட தப்பில்லை.


ராமகிருஷ்ணன்
நவ 01, 2024 05:30

இவர்களுக்கு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ராணுவ ஆட்சி தான் சரியாக இருக்கும். ஏற்காவிட்டால் பாக்கிஸ்தானுக்கு துரத்தி விடலாம்.


Palanisamy T
நவ 01, 2024 05:25

அவர் விழாவைப் புறக்கணித்ததில் வியப்பொன்றுமில்லை. எதிர்ப்பார்த்தது தான். இதை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்க முடியாது. மதச் சிந்தனைகள் தாக்க்கங்கள் சற்றும் சித்தாந்தங்களும் இதில் கலந்துள்ளன. மற்றபடி இந்தியா வசமுள்ள காஷ்மீர் பகுதி இந்திய நாட்டிற்கு சொந்தமில்லையென்று அவர் நினைக்கின்றாரோ இந்திய நாட்டின் அரசியல் சாசனம் சொல்லும் மதச் சார்பற்ற கொள்கையை அவர் ஏற்க மனமில்லையோ? இதெல்லாம் அவர்களின் பிறவிக் குணங்கள் . காலம் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்


சமீபத்திய செய்தி