உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,குடன் இந்தியா பேச்சு நடத்தாது: முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டவட்டம்

பாக்.,குடன் இந்தியா பேச்சு நடத்தாது: முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டவட்டம்

ஸ்ரீநகர் : கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும்' என கூறி வந்த, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, இப்போது, ஜம்மு - காஷ்மீர் முதல்வராகியுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது வீண் என கூறினார்.கடந்த, 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான ஒமர் அப்துல்லா, வடக்கு காஷ்மீரில் பேசும் போது, 'வாஜ்பாய் கூறியது போல, நண்பர்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும்; அண்டை மாநிலத்தை மாற்ற முடியாது என்பதில் நானும் உறுதியாக உள்ளேன். பாகிஸ்தான் எப்போதும் நம் அண்டை நாடாகவே விளங்கும். எனவே, பாகிஸ்தானுடனான பிரச்னைகள் குறித்து, அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும்' என்றார். அவரை போலவே, அவரின் தந்தை பரூக் அப்துல்லாவும் கருத்து தெரிவித்தார்.இந்நிலையில், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: இந்திய விவகாரங்களில் தலையிடுவதை, பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும், எல்லையில் இந்திய ராணுவத்துடன் அடிக்கடி சண்டையிட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக, எல்லையில் முகாம்களை அமைத்து வருகிறது.நிலைமை இவ்வாறு இருக்கையில், அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்துவது என்பது இயலாத ஒன்று. அவ்வாறு பேச்சு நடத்துவது வீணானதும் கூட. எனவே, இந்தியா மேற்கொள்ளும் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பங்கேற்று, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதுபோல, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்துவது என்பதும், இப்போதைக்கு இயலாத காரியம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.இதன் வாயிலாக, 'பாகிஸ்தான் ஆதரவு இன்றி, ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாது' என்ற அவரின் முந்தைய கருத்தில் இருந்து, இப்போது, பின்வாங்கியுள்ளது தெளிவாகிறது. மேலும், அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்ற கருத்தையும் அவர் வாபஸ் பெற்றுள்ளார் என்பதும் தெளிவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M.COM.N.K.K.
பிப் 21, 2025 13:50

உமர் அப்துல்லா அவர்களின் கருத்தை நாங்கள் முழுமனதோடு இதயம் கனிந்து ஏற்றுக்கொள்கிறோம் காரணம் ஜம்மு காஷ்மீருக்கு நமது அரசு அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுப்பதால் அவர் திருப்தி அடைந்துருப்பதையே இது காட்டுகிறது எப்போதும் நல்லதே நடக்கட்டும் வாழ்க பாரதம் வளர்க்க பாரதம். ஜெய் ஹிந்த்


PATTALI
பிப் 21, 2025 13:25

மத்தியஅரசு ஜாக்கிரதையாக இருந்துகொண்டு உமர் பேச்சுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்துபார்கலாம். வாய்ப்பு கொடுக்காமல் எப்படி அவரை நிரூபித்துக்கொள்ளமுடியும்.


Jai Sankar Natarajan
பிப் 21, 2025 11:46

அந்த பயம் இருக்கணும் ஒமர் பாய், வாழ்நாளிலேயே இப்பதான் முதல் தடவை ஒரு இந்தியனாக பேசுகிறாய்


bharathi
பிப் 21, 2025 11:07

Adhu!!


ஆரூர் ரங்
பிப் 21, 2025 10:54

நாதசு திருந்தட்டதா அவரே சொல்றார்.


Yes your honor
பிப் 21, 2025 10:11

நாய் வாலை நிமிர்த்த முடியாது, பாக்கிஸ்தான் திருந்தாது. இப்பொழுது வெளிமாநில இந்துக்கள் காஷ்மீரில் குடிபுகத் தொடங்கி விட்டனர். இனியும் பாக்கியை தூக்கிப்பிடித்தால் ஓட்டு விழாது என்பதை அப்துல்லா புரிந்து கொண்டுவிட்டார். மேலும், ஒரேயடியாக மோடிஜியையும் அமித் ஷா ஜியையும் பகைத்துக் கொண்டு, தனது மந்திரிகளை திஹார் ஜெயிலுக்கு அனுப்ப, இவர் என்ன வீணாப்போன திராவிட மாடல் ஆட்சியா நடத்துகிறார்? தமிழக அரசு மிகவும் விரைத்துக் கொண்டு நிற்கிறது, எளிதில் உடைந்துவிடும். திருடர்கள் கூட திருந்த வாய்ப்புண்டு, ஆனால் இந்த விடியா அரசு திருந்த வாய்ப்பே இல்லை ராஜா, வாய்ப்பே இல்லை.


chandrakumar
பிப் 21, 2025 10:02

ஒமர் அப்துல்லா வுக்கு நன்றாக தெரியும் இனியும் மத்திய அரசு எதிர்ப்பு நிலையினை கடைபிடித்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது என்று. உறுதி மிக்க மோடி அரசுடன் அனுசரணையாக போவதே தம் பதவியினை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதும் ஒமர் அப்துல்லா வுக்கு நன்றாக தெரியும். ஆர்டிக் கள் 370 இனி வாய்ப்பு இல்லை என ஒப்புக்கொண்டதில் இருந்து இது உறுதியாகின்றது....


N Srinivasan
பிப் 21, 2025 07:03

கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி பக்கம் வருவது நன்றாக தெரிகிறது. அரசியல் என்று பார்க்காமல் மாநிலத்தின் நலனில் பார்க்கும்போது ஒரு நல்ல விஷயம்


Iniyan
பிப் 21, 2025 06:50

இந்த அமைதி மார்க்க மூர்கர்களை நம்பக்கூடாது.


Kasimani Baskaran
பிப் 21, 2025 06:31

இந்த ஆள் திருந்திவிட்டதாக நினைத்துவிட வேண்டாம். தேர்தல் நேரத்தில் அப்படியே 180 பாகை திரும்பும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை