உ.பி.,யில் தீக்கிரையானது ஆம்னி பஸ் அதிர்ஷ்டவசமாக 39 பயணியர் தப்பினர்
லக்னோ: ஆந்திராவில் ஏற்பட்டதை போல் உத்தர பிரதேசத்திலும் ஆம்னி பஸ் நேற்று தீக்கிரையானது. எனினும், அதில் சென்ற 39 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோ ண்டா பகுதிக்கு 39 பயணியருடன் படுக்கை வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் உள்ள ரெவ்ரி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அந்தப் பஸ்சின் பி ன்பக்க டயரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இ தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர், உடனே பயணியரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பஸ்சில் இருந்த பயணியர் அவசரமாக இறங்கினர். இதற்கிடை யே பஸ் முழுதும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொ ண்டு வந்தனர். இந்த விபத்தில், பஸ் முற்றிலும் சேதமடைந்தது. எனினும், முன்னெச்சரிக்கையாக பயணியர் அனைவரும் கீழே இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக, ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயணியர் மாற்று பஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர். தெ லுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு சென்ற ஆம்னி பஸ், ஆந்திராவின் கர்னுால் பகுதி அருகே, சமீபத்தில் விபத்துக்கு உள்ளானது. இதி ல், 19 பயணியர் உடல் கருகி பலியாகினர். அதுபோன்று தனியார் பஸ் தீ விபத்தில் சிக்கியது, அதிர்ச்சியை ஏற்ப டுத்திஉள்ளது.
குடிபோதையால் பறிபோன 20 உயிர்கள்
ஆந்திராவில் நிகழ்ந்த கோர விபத்திற்கு பைக்கில் வந்த சிவசங்கர் என்ற இளைஞர் காரணம் என கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த அவரது நண்பர் எர்ரி சுவாமியை பிடித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஆந்திர போலீசார் கூறியதாவது: கடந்த 24ம் தேதி நள்ளிரவு 2:00 மணிக்கு கர்னுால் மாவட்டத்தின் லட்சுமிபுரத்தில் இருந்து துகாலி கிராமத்திற்கு பைக்கில் சென்றனர். அப்போது அவ்வழியில் இருந்த தாபாவில் உணவருந்திய இருவரும் மது அருந்தினர். அதன்பின் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியபின் பைக்கை தா றுமாறாக ஓட்டிச்சென்ற சிவசங்கர், அங்குள்ள சாலை தடுப்புச்சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற எர்ரி சுவாமி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கிடையே சாலையின் நடுவே கிடந்த சி வசங்கரின் உடலை, சாலையோரத்தில் எர்ரி சுவாமி கிடத்தினார். அதேச மயம் சிவசங்கரின் பைக், சாலையில் இருந்து அப்புறப்படுத்த எர்ரி சுவாமி முயன்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் கர்நாடகா நோக்கி சென்ற ஆம்னி பஸ், அந்த பைக்கை தரதரவென இழுத்து சென்றது. இதில் ஆம்னி பஸ்சின் டீசல் டேங்குடன் உரசி, கோர விபத்து ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.