உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியமன எம்.எல்.ஏ.,க்கள் தேவையே இல்லை; கவர்னர் முடிவுக்கு உமர் அப்துல்லா எதிர்ப்பு

நியமன எம்.எல்.ஏ.,க்கள் தேவையே இல்லை; கவர்னர் முடிவுக்கு உமர் அப்துல்லா எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 5 எம்.எல்.ஏக்களை துணை நிலை கவர்னர் சின்ஹா நியமனம் செய்வது தேவையில்லாதது என தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்தார்.10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, நேற்று தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. சட்டசபையில், துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.,க்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி செயல் தலைவர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4jj7i8ff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 '5 எம்.எல்.ஏ.,க்களை நியமனம் செய்ய வேண்டாம்' என மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோருக்கு உமர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது: இது தேவையற்ற அரசியல் மோதலுக்கு வழிவகுக்கும். இதை செய்ய வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஐந்து பேரை நியமிப்பதால் ஆட்சி மாறாது. அதனால் என்ன பயன்? தேவையில்லாமல் ஐந்து பேரை எதிர்க்கட்சியில் உட்கார வைப்பீர்கள். சுயேச்சை வேட்பாளர்கள் எங்களுடன் பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடன் இணைவார்கள், எனவே எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை உயரும். மீறி நடந்தால் சட்டப் போராட்டம் நடத்தப்படும் இதனை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சண்டை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.விதிகளின்படி, சட்டசபைக்கு துணை நிலை கவர்னர் நியமிக்கும் ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வைச் சேர்ந்தவராக இருந்தால், அது சட்டசபையின் பலத்தை 95 ஆக உயர்த்தி, அதன் மூலம் பெரும்பான்மையை 46ல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sivagiri
அக் 09, 2024 19:24

டில்லியை போல காவல்துறையை மத்திய அரசின் உள்துறை - கண்ட்ரோலில் வைத்துக் கொள்வது நல்லது . . .


Lion Drsekar
அக் 09, 2024 19:16

மக்களின் கேள்வி உங்களால் என்ன தேவை ? வந்தேமாதரம்


sankaranarayanan
அக் 09, 2024 19:00

ஆட்சியை தொடரும்முன்னே இந்த கோரிக்கைகளை வைத்து ஏனய்யா இவர் தொடக்கத்திலேயே ஆளுனருடன் குடுமி சண்டை போடுகிறார் அவர் மாநிலத்தகிற்கு ஆக்க பூர்வமான சேய்களை செய்தாலே பொதுமய்யா இது அரசியல் சாசன சட்டம் யாருமே மதிக்காமல் இருக்க முடியாது


தத்வமசி
அக் 09, 2024 18:19

தம்பி உமர், இது மத்திய அரசு ஆளும் யூனியன் பிரதேசம். ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து வைத்துள்ளது போல உங்களுக்கும் அளந்து தான் வைக்கப் பட்டுள்ளது. எந்த மன்றத்துக்கும் செல்லுங்கள். ஹரியானாவில் சுயேச்சைகள் பிஜேபியுடன் சேர்ந்தால் குதிரை பேரம், காஷ்மீரில் சுயேச்சைகள் உமர் கட்சியில் சேர்ந்தால் அது தான் உண்மையான ஜனநாயகம். நல்லா வருவீங்க


Rpalnivelu
அக் 09, 2024 15:40

பெர்மனெண்டா உங்க குடும்பமே ஆட்சியிலேயே இருக்கணுமா? தொண்டனுங்க உங்க குடும்பத்துக்கே உழைச்சி உழைச்சி ஓடா தேயனுமா?


Venkat
அக் 09, 2024 19:30

தமிழ்நாடு மாதிரி


Mohan
அக் 09, 2024 15:19

யூனியன் பிரதேசம் கவர்னர்குன்னு பல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கு ..அது சரி ..நீ பாக்கிஸ்தான் ஆளு அவன் சொல்லி இருப்பன் அதுக்குத்தான் இந்த குதி குதிக்குறே ...


Amar Akbar Antony
அக் 09, 2024 14:12

என்னமா ஆட்டம் ஏழு சீட்டு கிடைச்ச ராகுலுக்கே இப்படி எகிறினா முப்பது கிடைச்ச நாங்க இனி ஆட்சில இருந்தாலும் வாலை ஆட்ட முடியாது


GMM
அக் 09, 2024 14:04

நியமன உறுப்பினர் தேவையில்லை அல்லது தேவை என்று கூற உமருக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றம் நிர்வாக விவகாரங்களில் தலையிடாது. பிரதிநிதிகள் அதிகாரம் மீறி, சட்ட எல்லை மீறி சர்வசாதாரணமாக மசோதா தாக்கல் செய்து வருகிறீர்கள் இதனை முறைப்படுத்த முடியும். வழக்கு முடியும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி. ஓ.கே வா.


ஆரூர் ரங்
அக் 09, 2024 13:48

சட்டமன்றமுள்ள புதுவை போன்ற எல்லா யூனியன் பிரதேசங்களிலும் உறுப்பினர்கள் நியமன முறை துவக்கத்திலிருந்தே உண்டு. ராஜ்யசபாவில் நியமன உறுப்பினர்கள் இருப்பதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. தங்கள் தீவீரவாத ஆட்களுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் எதிர்ப்பு. முன்பே புதுவை நியமனங்களை சுப்ரீம் கோர்ட் ஏற்றுள்ளது. வீண் அரசியல்.


A Viswanathan
அக் 09, 2024 15:06

370 தும் தேவையில்லை என்று சொல்லவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை