உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும்... ஒரே செயலி!

 ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும்... ஒரே செயலி!

புதுடில்லி ரயில் டிக்கெட் முன்பதிவு, புறப்பாடு - வருகை, சேவை குறைபாடு குறித்த புகார்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை சீட்டு உட்பட ரயில்வே தொடர்பான அனைத்து தேவைகளுக்கும், 100 கோடி ரூபாய் செலவில் ஒரே செயலியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது.ரயில் சேவையை பயன்படுத்தும் பயணியர், ஒவ்வொரு சேவைக்கு என்று தற்போது தனித்தனியே உள்ள செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்' என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., இ - கேட்டரிங்' செயலி பயன்படுத்தப்படுகிறது.பயணத்தின் போது புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க, 'ரயில் மடாட்' என்ற செயலி உள்ளது.

பயண அட்டை

முன்பதிவு இல்லா டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பெற, யு.டி.எஸ்., என்ற செயலியும்; ரயில் இயக்கப்படும் விபரங்களை தெரிந்து கொள்ள, என்.டி.எஸ்., என்ற செயலியும் பயன்பாட்டில் உள்ளன.இவற்றில், ஐ.ஆர்.சி.டி.சி., செயலியை மட்டும் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இது உள்ளது. 2023 - 24ல் ஐ.ஆர்.சி.டி.சி., 4,270 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதில், 1,111 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது.இந்த காலகட்டத்தில், 45.30 கோடி டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.டிக்கெட் முன்பதிவில் மட்டும் 30.33 சதவீத வருவாய் கிடைத்துஉள்ளது. நடைமேடை சீட்டு மற்றும் மாதாந்திர ரயில் பயண அட்டை பெறுவதற்கான யு.டி.எஸ்., செயலியை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

'சூப்பர் ஆப்'

இந்த அனைத்து செயலிகளையும், சி.ஆர்.ஐ.எஸ்., எனப்படும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது.இந்நிலையில், இந்த அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'சூப்பர் ஆப்' என்ற புதிய செயலியை சி.ஆர்.ஐ.எஸ்., உருவாக்கி வருகிறது. இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அமல்

ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது.ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் ஒரு தொழில்நுட்ப வசதியாகத் தான் இந்த சூப்பர் செயலியை நாங்கள் கருதுகிறோம். இது, அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
நவ 05, 2024 17:21

ஒரே செயலி... ஒரே உருவல்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 05, 2024 09:17

ஐ.ஆர்.சி.டி.சி., லாபம் ஈட்டிவிட்டதாம். பொய் சொல்லாதீர்கள். ஐ.ஆர்.சி.டி.சி., கொள்ளை அடிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள். தட்கல் என்றும், ப்ரீமியம் தட்கல் என்றும், பயண சீட்டு ரத்து செய்வதற்கு என்றும் சொல்லி மக்களின் பணத்தை உறிஞ்சிகிறார்கள். வேண்டுமென்றே ரயில்களை இயக்காமல் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதில் ரயில்வே துறை முதலிடத்தில் உள்ளது. ஆனால், இதெல்லாம் மோடிக்கு தெரிந்துதான் நடக்கிறதா என்று தெரியவில்லை. பாவம் ஏழை மக்கள்.


Ganesun Iyer
நவ 05, 2024 07:39

ஒருங்கிணைந்த செயலி வரவேற்கத்தக்கது.. யூடிஎஸ்ஸில் தற்போது உள்ள நடைமுறையில் ரயில் நிலையத்திலிருந்து பயணசீட்டு எடுக்க முடியாது இந்த குறையை தீர்க்க வேண்டும்.


narayanansagmailcom
நவ 05, 2024 06:32

Thank you Modiji for giving more facility to our passengers


narayanansagmailcom
நவ 05, 2024 03:15

சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை