உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி கணக்கு மூலம் ரூ.9.64 கோடி மோசடி; ஒருவர் கைது

போலி கணக்கு மூலம் ரூ.9.64 கோடி மோசடி; ஒருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலி கணக்குகள் மூலம் ரூ.9.64 கோடி மோசடியாக உள்ளீட்டு வரி வரவு பெற்ற ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அமலாக்க நிறுவனமான கோவை மண்டலப் பிரிவின் ஜி.எஸ்.டி., நுண்ணறிவு இயக்குநரக ஓசூர் மண்டல அதிகாரிகள், சரக்குகளைக் கையாளும் ஓர் உரிமையாளர் நிறுவனத்தில் தேடுதல் மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, 21 நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதும், உண்மையான சரக்கு வழங்கல் இல்லாமல் பொய்யான கணக்கு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மூலம் மோசடியான உள்ளீட்டு வரி வரவுகளை அந்த உரிமையாளர் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.மேற்படி உரிமையாளர் நிறுவனம் ரூ. 321.37 கோடி வரி விதிக்கக்கூடிய மதிப்பில் ரூ.9.64 கோடி மோசடியான உள்ளீட்டு வரி வரவு பெற்றுள்ளது தெரியவந்தது. வணிகர்களுக்கு உதவி செய்வதற்காக ஜி.எஸ்.டி., நிர்வாகத்தின் கீழ் அரசால் வழங்கப்பட்ட வசதியை இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி