உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ., ஆதரவு; இண்டியா கூட்டணி எதிர்ப்பு!

புதுடில்லி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆளுங்கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தலைவர்கள் கூறியதாவது:

ஆதரவு

மத்திய அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையில், பாரதம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. தேர்தல் சீர்திருத்தம் என்ற நோக்கில், ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுத்தமான மற்றும் நேர்மையான தேர்தல் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும் என்ற பிரதமரின் கொள்கை வலுப்பெறுவதுடன், பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். 80 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். அரசியலை தாண்டி நாட்டு நலன் முக்கியம்.

எதிர்ப்பு

காங்கிரஸ் தலைவர் கார்கே

இதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்த முடியாது. நமது ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால், தேவைப்படும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டியது முக்கியம்.

தி.மு.க.,வின் டிகேஎஸ் இளங்கோவன்

மத்திய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. 22 மொழி பேசும், பல்வேறு மதங்கள், ஜாதிகள், பிரிவினர் மற்றும் கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரே நாடு என எண்ணிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்கவும், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க வேண்டும் என்ற மறைமுக திட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பா.ஜ., கற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி., மனோஜ் ஜா

அரசு கவிழ்ந்தால் என்ன செய்வீர்கள். ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவீர்களா? தேர்தல் நடத்தும் வரை கவர்னர் மூலம் ஆட்சியை நடத்துவீர்களா? மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்ற முயற்சி நடக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தின் ஆன்மாவை நொறுக்க முயற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Dharmavaan
செப் 19, 2024 03:10

கூட்டாட்சிதான் நாட்டை நாசமாக்குகிறது பல அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்


Dharmavaan
செப் 19, 2024 03:05

இந்தி கூட்டணி சுய நல திருடர்கள் நாடு கெட்டால் கவலையில்லை ..தில்லுமுல்லு செய்து கொள்ளை அடிக்க வேண்டும்


N SASIKUMAR YADHAV
செப் 18, 2024 22:23

பிரிவினை பேசும் திராவிட மாடல் தேசதுரோக இளங்கோவை அவர் விரும்பும் நாட்டிற்கு கடத்துங்கள்


venugopal s
செப் 18, 2024 22:11

ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமுண்டு. அதற்காக இந்த நாட்டு குடிமகன் யாரையும் நாட்டை விட்டு வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை!


Kasimani Baskaran
செப் 18, 2024 22:10

ஜனாதிபதியின் அங்கீகாரம் வாங்கியாகிவிட்டது. இனி கதற மட்டுமே முடியும். ஆண்டுக்கு நாலு தேர்தல் என்பது அக்கிரமமான அணுகுமுறை.


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 19, 2024 00:57

இதை நாயுடு மற்றும் நிதீஷ் ஒத்துக்கொள்ளட்டும் பாப்போம்


கிஜன்
செப் 18, 2024 21:49

டி.கே.எஸ். இளங்கோவன் .... எப்படி வேணும்னாலும் பேசுவாரு ன்னு அவிங்க அமைச்சரே சொன்னாரு .... அவரு இந்தியா ஒரு நாடு இல்ல ன்னு சொல்றாரு ...


கிஜன்
செப் 18, 2024 23:52

நெறியாளருக்கு ஏன் - ஒரு கிலோ எறா கொடுத்தாங்கிற வார்த்தை புடிக்கலைன்னு தெரியலையே ...


Jay
செப் 18, 2024 21:49

எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லி குழப்பலாம். இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் என்பது தேர்தல் செலவுகளை மிச்சப்படுத்த உதவும். ஒரே நேரத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மற்றும் உள்ளாட்சி தேர்தலும் நடத்தினால் அரசுக்கு செலவு மிச்சமாகும். அதோடு ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் வாக்காளர்களை கவர்வதற்காகவும் வாக்காளர்களை சவுரியமாக பார்த்துக் கொள்வதற்காகவும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தேர்தல் வருகிறது என்றால் சாலை விரிவாக்கம் நடக்காது, உயர்த்தப்பட வேண்டிய வரிகள், மின்சார கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதோடு தேர்தலில் வாக்காளர்களுக்கு காசு கொடுக்கும் திமுக போன்ற கட்சிகளுக்கு செலவும் மிச்சமாகும்.


Siva Subramaniam
செப் 18, 2024 21:38

எதற்கும் எதிர்ப்பு என்று இருப்பவர்கள், தாங்கள் ஆற்றிய அரசியல் மூலம் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லட்டும், முடியுமா?


T.sthivinayagam
செப் 18, 2024 21:36

மூன்று சதவிதம் மீதமுள்ள சதவித்த்தை ஆள்வதே சூஷ்மம்


vadivelu
செப் 19, 2024 06:44

அவ்வளவு அறியாமையிலா 97 சதவீதம் இருக்கிறார்கள்? உங்களை போன்று ஒன்று இருவர் இப்படி இன்னமும் இருக்கிறீர்கள் .


N Sasikumar Yadhav
செப் 18, 2024 21:32

அரசு கவிழ்ந்தால் கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சி மட்டுமே கொண்டுவர வேண்டும்


சமீபத்திய செய்தி