உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜே.பி.சி., தலைவர் நியமனம்

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜே.பி.சி., தலைவர் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு( ஜே.பி.சி.,) தலைவராக பா.ஜ., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் டிச., 17 ல் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப லோக்சபா எம்.பி.,க்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான இரு மசோதாவை ஆய்வு செய்வதற்கான ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் லோக்சபாவை சேர்ந்த எம்.பி.,க்கள் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பா.ஜ., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிபி சவுத்ரி, அனுராக் தாக்கூர், எம்.பி.,க்கள் பர்ஷோத்தம்பாய் ரூபாலா, பன்சுரி சுவராஜ், சம்பித் பத்ரா, சி.எம்.ரமேஷ், விஷ்ணு தயால் ராம், பரத்ருஹரி மஹ்தாப், அனில் பலூனி, விஷணு தத் சர்மா, பைஜெயந்த் பன்டா,சஞ்சய் ஜெயிஸ்வால்காங்கிரசின் பிரியங்கா, மணீஷ் திவாரி, சுக்தியோ பகத்சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டேசமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவ் ,சோட்டேலால்திரிணமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜிதி.மு.க.,வின் செல்வகணபதிதெலுங்குதேசத்தின் ஹரீஸ் பாலயோகிதேசியவாத காங்கிரசின் சரத்பவார் அணியின் சுப்ரியா சுலேலோக்ஜனசக்தி கட்சியின் சம்பவிஉத்தவ் தாக்கரே (உத்தவ் தாக்கரே தரப்பு) அனில் யஷ்வந்த் தேசாய்மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் ராதாகிருஷ்ணன்ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் சந்தன் சிங் சவுகான்ஜனசேனா கட்சியின் வல்லபனேனி பாலாஷவுரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.ராஜ்யசபா எம்.பி.,க்களான பா.ஜ.,வைச் சேர்ந்த கன்ஷியாம் திவாரி, புவனேஸ்வர் கலிதா, கே. லக்ஷ்மன், கவிதா படிடர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா காங்கிரசின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ,முகுல் பால்கிருஷ்ணா வாஸ்னிக், திரிணமுல் காங்கிரசின் சாகேத் கோகலே , தி.மு.க.,வின் பி.வில்சன், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், பிஜூ ஜனதா தளத்தின் மானஸ் ரஞ்சன் மங்கராஜ், ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சியின் வி.விஜயசாய் ரெட்டி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தலைவர்

இக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2017- 19 காலகட்டத்தில் கார்பரேட் விவகாரம், சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார்.இவர் வெளியுறவு குழுவுக்கான தலைவராகவும், தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான கூட்டு குழு தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 21, 2024 12:09

மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் தேவை என்று நாம் சிந்திக்கும் அதே நேரத்தில் அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் அமைப்புக்கள் அமைச்சர்கள் சிந்திக்காமலோ ஆலோசிக்கமலா மசோதா தாக்கல் செய்திருப்பார்கள். பெரும்பான்மை பலம் பெற பாஜக எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அது காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் பார்த்து கொள்ளும். இந்த எதிர் கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் செய்யாமல் எப்பொழுதும் அரசை எதிர்க்கும் ஒரே குறிக்கோளுடன் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பம் செய்து கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல் எதோ பெரியதாய் கண்டுபிடித்த தை போல் அம்பேத்கர் பெயர் வைத்து ஊடகங்களுக்கு தீனி போட்டு டிவியில் தங்கள் முகம் வருவது பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டு உள்ளார்கள். இந்த எதிர் கட்சிகள் மனநிலை நன்கு தெரிந்து கொண்ட ஆளுங்கட்சி எதிர்கட்சிகளுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்து விட்டு தங்களுக்கு எது தேவையோ அதை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பலவிதமான இனிப்பு சாப்பிட்டு கொண்டு உள்ளார்கள்.


Ramaraj P
டிச 21, 2024 06:48

மசோதா நிறைவேற்றும் நாளில் பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பிகளில் தான் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. எனக்கு தெரிந்து திமுக மற்றும் திரிணாமுல் வெளிநடப்பு செய்து விடும்.


K V Ramadoss
டிச 20, 2024 23:41

இதன் நல்லது, நல்லது அல்லாதது எது என்று அலசாமல், பிஜேபி நாடகம் என்று விமர்சிப்பது உங்கள் அறிவின் தரத்தைத்தான் குறிக்கிறது.


Oviya Vijay
டிச 21, 2024 00:14

பெரும்பான்மையே இல்லாமல் நம் இந்திய நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்றை தூக்கிக் கொண்டு வருவதற்கு பெயர் நாடகம் அல்லாமல் என்னவாம்...


Oviya Vijay
டிச 20, 2024 23:09

இதை நிறைவேற்ற வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். அது இல்லாத பாஜக நடத்தும் பொம்மை நாடகம் இது. தற்போதைய சூழலில் சாத்தியமேயில்லாத ஒன்று விரைவில் கிடப்பில் போடப்படும்.


raja
டிச 21, 2024 05:44

கூமுட்டைகள் இப்படித்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்க சாத்தியம் இல்லை என்றும் முத்தலாக் சட்டத்தை நீக்கவும் சாத்தியம் இல்லை என்றும் ஒப்பாரி வைத்து ஓலை இட்டார்கள்... மோடி சாத்திய படித்து விட்டார்... அது தான் மோடி...


தத்வமசி
டிச 20, 2024 22:13

இல்லாத திராவிட நாட்டை திணிப்பார்கள். உதவாத கம்யுனிஸ்டை பரப்புவார்கள், வீணாப்போன கட்சியெல்லாம் நாட்டுக்காக கத்தாது. இதற்கெல்லாம் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்று கூவ வேண்டியது. ஆனால் பிஜெபி ஏதாவது நல்லது செய்தால் அதை எதிர்க்க வேண்டியது.


சமீபத்திய செய்தி