உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல் ' திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mwcno8vj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும் போது இந்த திட்டம் குறித்து வலியுறுத்தி பேசினார். சட்ட கமிஷனும் இது குறித்த அறிக்கைகளை விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த ராம்நாத் கோவிந்த்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இது குறித்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆலோசனைக்கு பிறகு 18, 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமே. இதனை அமல்படுத்துவதற்கும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தால் அல்லது தொங்கு சட்டசபை அமைந்தால் மீண்டும் தேர்தல் நடத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஆதரவு

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு ஜனநாயகத்தையும் தேசத்தையும் பாதிக்கும் விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இத்திட்டம், நமது நாட்டை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 18, 2024 23:22

நல்லது இப்ப தேர்தல் வெச்சால் MLA மலை கூட தேறாது


Hari
செப் 19, 2024 07:43

You will also not get rs 5000 osi


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 21:20

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியர்களின் கனவு திட்டம். அடிக்கடி தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியது.


venugopal s
செப் 18, 2024 20:07

மத்திய அமைச்சரவை கிடக்கட்டும்,மக்கள் ஒப்புக் கொண்டார்களா?


Hari
செப் 19, 2024 07:42

Yes all Indians accepted except kothadimai venugopal


Easwar Kamal
செப் 18, 2024 20:00

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றல் உங்கள் கூட்டணியில் உள்ள பீகார், ஆந்திரம் மற்றும் ஒரிசா எல்லா வற்றுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமே ? அவர்கள் ஒத்து கொளுவார்களா ? அவர்கள் ஓத்துழைத்தால் தானே நடக்கும்


kumar
செப் 18, 2024 19:29

முதலில் நம் நாட்டில் இருக்கும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஆகிய அனைவருக்கும் கல்வித்தகுதி, எழுத்துத் தேர்வு, வயது வரம்பு, அனுபவம், ஒரு தொகுதியில் மட்டும் போட்டி, வரிஏய்ப்பு, லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு தடை ஆகியவற்றை சட்டத்தில் கண்டிப்பாக கொண்டுவாங்க. இதை முதல்ல செய்யுங்க.


MUTHU
செப் 18, 2024 19:07

மாநில கட்சிகளுக்கும் தெரியும் இது தான் தங்களுக்கும் நல்லது என்று. ஆனாலும் வெட்டி வீம்பு.


Narasimhan
செப் 18, 2024 18:14

நேற்றுதான் பெயிலில் இருக்கும் ஒரு அதிமேதாவி ஒரு நாடு ஒரு தேர்தல் சாத்தியமில்லை என்று கூவினார்


Mohan
செப் 18, 2024 17:24

எங்கப்பா நாங்க ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மோடியால் முடியாது அந்தளவுக்கு பெரும்பான்மை இல்ல இனி எந்த ஒரு முடிவும் தன்னிச்சய எடுக்க இயலாது ..கடிவாளம் போட்டாச்சு இனி அவ்ளோ தான் அப்படி இப்டினு உருட்டுனானுக ...எங்காவது கண்டா புடிங்க ..


GMM
செப் 18, 2024 16:57

நாடாளுமன்ற முடிவுக்கு பின் மாநில ஒப்புதல் தேவையில்லை . மாநிலம் மாவட்ட ஒப்புதல் பெறுவது இல்லை. ஜட்ஜ் தீர்ப்பு கூறிய பின் டபேதார் ஒப்புதல் தேவை போல் உள்ளது இந்த முறை. யார் கண்டுபிடித்தது ? ஒரே தேர்தலில் செலவு, நேரம், மனித சக்தி குறைவு. ஆளும் கட்சி 5 ஆண்டுகள் கட்டாயம் இல்லை. கவிழும் கலைக்க வேண்டி வரும். ஒரே தேர்தலுக்கு பின் 5 ஆண்டுகள் உள்ளாட்சி, மாநில நிர்வாகம் முடங்கினால் கவர்னர், ஜனாதிபதி ஆட்சி. அல்லது அடுத்த அதிக எண்ணிக்கை கொண்ட எதிர்க்கட்சி ஆட்சி. புள்ளி கூட்டணி கருத்து தேவை.


Rengaraj
செப் 18, 2024 16:06

கண்டிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேற வேண்டும். நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. அவை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்ற்றத்துக்கும் பெரும் தடையாக இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் அடுத்த இருபத்தைந்தாண்டு கால வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையில் இந்தியா தற்போது சென்றுகொண்டிருக்கிறது. இனிமேலும் செல்லவிருக்கிறது. வெகுகாலத்துக்கு பிறகு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. இது உலக அரங்கில் நம் நாட்டின் மீதான மரியாதையை கூட்டியிருக்கிறது. நம்மீது கொண்டுள்ள உலகநாடுகளின் நம்பிக்கையும் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பும் நமக்கு தொடர்ந்து இருக்கவேண்டுமானால் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் தடையாக இருக்கக்கூடாது. மாறிமாறி நடக்கும் மாநில தேர்தல்களால் நமது மத்திய அரசு மீது மற்றநாடுகள் கொண்டுள்ள அரசியல் பார்வைகளும் ஒருவிதத்தில் நமது பொருளாதார வளர்ச்சியை நீண்டகால அளவில் பாதிக்கும். எனவே இந்த சட்டத்தை நமது இந்திய நாடு , நாட்டின் வளர்ச்சி என்றுதான் பார்க்கவேண்டும் தவிர பா.ஜ.க அரசியல் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது . இங்கே மாநில சுயாட்சி, மாநில உரிமை என்றெல்லாம் பார்த்து தேசத்தை கூறுபோட விடக்கூடாது. இங்கே அரசியல் உரிமைகள் யாருக்கும் மறுக்கப்படவில்லை. தேர்தலில் நிற்பதற்கும் தடை இல்லை. அவரவர்கள் வாக்குவங்கி அவரவர்க்கே . நமது சண்டைகள் நமக்குள்ளே இருக்கவேண்டும். உலக நாடுகளின் அவநம்பிக்கைக்கு காரணமாக நமக்குள்ளே நடக்கும் அரசியல் சண்டை இருக்கக்கூடாது.


புதிய வீடியோ