உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யப்ப பக்தர்கள் பஸ் விபத்து ஒருவர் பலி; 33 பேர் படுகாயம்

அய்யப்ப பக்தர்கள் பஸ் விபத்து ஒருவர் பலி; 33 பேர் படுகாயம்

சபரிமலை:கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது சித்திரை விஷு பூஜை நடந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து சபரிமலைக்கு, 35 பக்தர்கள் அடங்கிய குழுவினர் சபரிமலைக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். எருமேலி அருகே பம்பாவாலி கணமலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், ஒரு பக்தர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 பேர் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளத்தில் கவிழ்ந்த பஸ், ஒரு மரத்தில் சிக்கி நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். எருமேலி போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி