மேலும் செய்திகள்
ரேஷன் கடை ஊழியர் இறப்பு போலீசார் விசாரணை
24-Oct-2024
புதுடில்லி:டில்லியின் ரோகினியில் உள்ள அமன் விஹார் பகுதியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், கை வண்டி ஆகியவை சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 4 பேர் காயமடைந்தனர்.நேற்று முன் தினம் இரவு அமன் விஹார் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. சம்பவ இடத்தில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்தர் யாதவ், 53, என்பவர் உயிரிழந்தார்.காயமடைந்த -- அருண் குமார், 38, ராகுல் சிங், 29, சச்சின், 18, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஹிருத்யா ஜுனேஜா, 23, ஆகிய அனைவருக்கும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Oct-2024