உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி: 5 மாதங்களில் சாதனை

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி: 5 மாதங்களில் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்தியாவில் செயல்பட தொடங்கியதில் இருந்தே, மொபைல் போன் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு மொபைல் போன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும். முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஏற்றுமதியானது 55 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. நாட்டின் மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில், பெரும்பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்று அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டிம் குக் இந்த ஆண்டு ஜூலை மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

vijaysmarter
செப் 29, 2025 06:44

மோடிஜி அரசின் சாதனை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 20:20

தமிழ்நாடு மிக விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும் என்று நம்பலாம். தமிழ்நாட்டின் வளர்ச்சி, சங்கிகளுக்கு புகைச்சல்.


vijaysmarter
செப் 29, 2025 06:46

வழக்கம் போல் குருட்டு கொத்தடிமை ஈனபிறவிகள் சாதனை என பெருமிதம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 20:17

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் முதன்மையாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூரில் foxconn தொழிற்சாலையில் பெரும்பான்மை உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை டாடா எலக்ட்ரானிக்ஸ் முன்னர் விஸ்ட்ரான்/பெகட்ரான் செயல்பாடுகளை கையகப்படுத்தியது. ஃபாக்ஸ்கானின் புதிய தொழிற்சாலையில் தயாராகிறது.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 12:45

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, இதனால் எத்தனை ஆயிரம் இந்தியர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எவ்வளவு வரி வருவாய் வந்தது, தொழிற்சாலைகளை இயக்கும் இந்திய நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் வந்தது என்ற விபரங்கள்தான். இவை நமக்கு நேரடியாக தெரியாவிட்டாலும் இவைதான் இந்திய பொருளாதார சக்கரத்தை இயக்கும் காரணிகள். இவைதான் இந்திய பொருளாதாரம் உயரவும், தனிநபர் வருமானம் உயரவும் வழிவகுக்கும்.


மாபாதகன்
செப் 25, 2025 14:21

அப்போ அமெரிக்க காரன் கூட லடாய் எதுக்கு?? மூடிக்கினு இருக்க வேண்டியதுதானே??


djivagane
செப் 25, 2025 11:59

ஐபோன் ஏற்றுமதி 50% அமெரிக்காவுக்கு வரி போடுவேண்டும்


Venugopal S
செப் 25, 2025 10:37

பாவம் கிணற்றுத்தவளைகள், இதில் பாதியளவுக்கும் மேல் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை தெரியுமா ?


ஆரூர் ரங்
செப் 25, 2025 12:33

அதைவிட மகன் மருமகனின் முதலீட்டு ஏற்றுமதி அதிகம். நாம்தான் ஒன்பதரை லட்சம் கோடி கடனில் சிக்கித் தத்தளிக்கிறோம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2025 13:09

அடிமைகளை விட கிணற்றுத் தவளைகள் வேறு எதுவும் இருக்க வாய்ப்புண்டா >>>>


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 25, 2025 14:06

எப்படியோ திராவிட மாடல் வழக்கப்படி ஸ்டிக்கர் ஒட்டியாச்சு


ராமகிருஷ்ணன்
செப் 25, 2025 14:19

ஓ திராவிஷ தவளையா


sankaranarayanan
செப் 25, 2025 10:34

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில், பெரும்பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது அதேபோன்று அமெரிக்காவில் கம்ப்யூட்டர் தொழிலில் பார்க்கும் பெரும்பாண்மை மக்களும் இந்தியர்களே இதில் மாற்றம் இல்லை நமது பிரதமர் மோடிக்குத்தான் மிக பெருமை


மாபாதகன்
செப் 25, 2025 14:23

ஏன்னா பத்து பண்ணீரெண்டு வருஷத்திலேதான் அவுக எல்லாம் இன்ஜினியரிங் படித்தாக அப்படித்தானே??


Madras Madra
செப் 25, 2025 10:28

இதெல்லாம் எந்த இண்டி தலைவர்களாலும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனை


VENKATASUBRAMANIAN
செப் 25, 2025 09:46

திமுகவுக்கும் சேர்த்து வயிறு எரியும்


MARUTHU PANDIAR
செப் 25, 2025 09:29

பப்புவுக்கும் அவன் கூட்டத்துக்கும் வயிறு பொருமும்.


புதிய வீடியோ