உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயிலுக்கு ஒரு லட்சம் லட்டு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ராமர் கோயிலுக்கு ஒரு லட்சம் லட்டு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து தலா ஒரு லட்சம் லட்டுக்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினருக்கும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஒரு லட்சம் லட்டுக்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. இது குறித்து அதன் நிர்வாக அதிகாரி ஏ.வி தர்மா ரெட்டி கூறுகையில், ''ஜன.,22ல் ராமர் கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்காக முழு தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது. கடவுள் வெங்கடேஸ்வரரும், ராமரும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்கள். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தலா 25 கிராம் எடைக்கொண்ட ஒரு லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஜன 05, 2024 21:33

தமிழகத்திலிருந்து திராவிட விடியல் அரசுபல லட்சம் பாட்டில்களில் மழை வெள்ளத்தண்ணீரை பாட்டிலில் அடைத்து அயோத்திக்கு அனுப்பலாம்.


Easwar Kamal
ஜன 05, 2024 21:07

1 லச்சம் எல்லாம் பத்தும்மா? அங்கயே கூண்டிக்கின்ற கூட்டம் 1 கோடி மேல் இருக்க போகிறது.


mrsethuraman
ஜன 05, 2024 18:05

நாட்டில் அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த விழாவுக்கு பங்களிக்கின்றன .இது தான் உண்மையான பாரத் ஜோடோ முயற்சி .


Seshan Thirumaliruncholai
ஜன 05, 2024 17:17

லட்சம் லட்டு அனுப்புவது இருக்கட்டும். நாடு முழுவதும் ஏன் வெளிதேசங்களில் ஸ்வாமி தசரத ராமன்அர்ச்சா நிலையில் எழுந்தறியுள்ளான். மதுராந்தகம் வடுவூர் பத்ராதலம் போன்ற இடங்களில். தவிர நிறைய திருக்கோயில்களில் அருள் பாலிக்கிறான். லட்டு என்பதில்லை. காஞ்சிபுரம் இட்லி ஸ்ரீவில்லிபுத்தூர் சக்கரை பொங்கல். புளியோதரைஎல்லா விஷ்ணு திருக்கோயில்களில் பிரசாதம். இவைகளை பெருமாள் பிரசாதமாக பக்தர்களுக்குகுறிப்பாக நோயாளிகள் அநாதை இல்லத்தில் உள்ளவர்கள்முன்னுரிமை கொடுத்து வழங்கலாம். ஆஸ்திகர்களிடம் வசூல்செய்து இந்த கைங்கரியம் செய்யவேண்டும்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 21:02

சேஷன் இது தான் இந்துக்களின் மடத்தனம், ஒருவர் நல்லது செய்தல் பாராட்ட வேண்டியது விட்டுவிட்டு குற்றம் சொல்லவது ஏன்? தமிழகத்தில் ஹிந்துக்களின் காணிக்கையை சுரண்டும் திருட்டு திராவிட அரசை ஏன் கேள்வி கேட்கவில்லை?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை