உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 45 பேர் பலியான சவுதி பஸ் விபத்தில் உயிர்தப்பிய ஒற்றை இந்தியர்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

45 பேர் பலியான சவுதி பஸ் விபத்தில் உயிர்தப்பிய ஒற்றை இந்தியர்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதீனா: சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் டேங்கர் லாரி மோதி 45 பேர் பலியான விபத்தில் ஒரேயொருவர் மட்டும் உயிர் தப்பி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.சவுதி அரேபியாவில் முக்கிய இஸ்லாமிய நகரம் மதீனா. மெக்காவுக்கு அடுத்ததாக இஸ்லாமியர்களுக்கு புனித நகரமாக கருதப்படும் மதீனாவுக்கு அருகே பஸ் ஒன்றில் பலர் உம்ரா புனித பயணம் சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aspdaykv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதீனாவுக்கு 160 கிமீ தொலைவில் முப்ரிபாத் என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்து 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். மீட்புக்குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப்பணிகளில் இறங்கினர். அப்போது பஸ்சில் பயணித்தவர்களில் ஒருவரை தவிர, எஞ்சிய அனைவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவரை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது அவர் யார், பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது. அவரின் பெயர் முகமது அப்துல் சோயிப். 24 வயது வாலிபரான அவர், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். விபத்தின் போது பஸ் டிரைவர் அருகில் இருந்து உட்கார்ந்து பயணித்து இருக்கிறார். முகமது அப்துல் சோயிப் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.இதனிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் சவுதி பயணம் செய்ய ஏதுவாக தெலுங்கானா அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டுகளை விரைவில் வினியோகிக்கவும், தேவையான அவசர உதவிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NRajasekar
நவ 18, 2025 03:48

அவர்கள் யாராக இருந்தாலும் இந்த கொடிய சம்பவம் வருத்தத்தை தருகிறது எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டுவது நம் தர்மம் பாவம்


anand
நவ 17, 2025 19:57

ஷாட் news


anand
நவ 17, 2025 18:50

sad


Rathna
நவ 17, 2025 17:58

நாம் நல்ல மனதோடு எல்லா சமூகத்தினரும் நலம் பெற வேண்டுகிறோம். ஆனால் டெல்லியில் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அவனது சமூகத்தை சேர்ந்தவர்களோ, தலைவர்கள் ஒருவர் கூட இரக்கம் தெரிவிக்கவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2025 17:50

விசாரிக்கணும் ........


Field Marshal
நவ 17, 2025 17:04

இருந்தால் பாஸ்போர்ட் கேன்சல் தானே ஆகும் ..புனித தலத்தில் இறந்ததால் அங்கே அடக்கம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் ..


Ravi Manickam
நவ 17, 2025 21:32

அது மட்டும் சவுதியில் நடக்காது, இந்தியாவில் உள்ள பெரும் இஸ்லாமிய தலைவரே சவுதில் இறந்தால் அங்கு இடமில்லை பாசு.


Ravi Manickam
நவ 17, 2025 21:35

Sorry தவறுதலான தகவல், 2012 ல் மாற்றிவிட்டார்கள்.


MARUTHU PANDIAR
நவ 17, 2025 17:02

நிரம்ப மகிழ்ச்சி


Priyan Vadanad
நவ 17, 2025 18:19

இந்த அளவுக்கா மனிதாபிமானம் இல்லாமல் படு கீழ்த்தரமாக சிந்தித்து கருத்து பதிவிடுவீர்கள்.


rajasekaran
நவ 17, 2025 18:22

நாம் எல்லோரும் அப்படி பதிவு போட வேண்டாம். அவர்கள் நம்மவர்களை எப்படி நினைக்கிறார்களோ பரவாயில்லை. நாம் நாமாகவே இருக்க வேண்டும். நன்றி.


Priyan Vadanad
நவ 17, 2025 18:24

இறந்துபோனவர்களும் அதில் தப்பி உயிர் பிழைத்த அப்துல் சோயிபும் ரத்தங்களே, நம் சொந்தங்களே.


MARUTHU PANDIAR
நவ 17, 2025 19:22

ஒருவராவது உயிர் பிழைத்ததற்கு நிரம்ப மகிழ்ச்சி. ஆனால் திரிந்த மனத்துக்கும் கோணல் பார்வைக்கும் வேறு விதமாய் தோண்றினால் அது அவர்களுக்கே வெளிச்சம்.


புதிய வீடியோ