மேலும் செய்திகள்
ஸ்கூட்டரில் கார் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு
28-Jul-2025
புதுடில்லி:தாறுமாறாக ஓடிய கார் மோதி, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய டில்லியில் இருந்து, நேற்று காலை, 6:30 மணிக்கு அதிவேகமாக வந்த, 'மஹிந்திரா தார்' சொகுசு கார், புதுடில்லி சாணக்யபுரி க்யாரா மூர்த்தி நினைவுச் சின்னம் அருகே, நடைபாதையில் ஏறியது. அப்போது, நடைபாதையில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதியது. காயம் அடைந்த இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், ஒருவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொருவர் எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், காரை ஓட்டி வந்த ஆஷிஷ் என்பவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். தன் நண்பரான உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சேர்ந்த அங்கித் என்பவரின் காரில், தவுலா குவானில் இருந்து கிழக்கு டில்லியில் உள்ள ஷகர்பூரில் உள்ள தன் வீட்டுக்கு, ஆஷிஷ் சென்ற போது, விபத்து ஏற்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆஷிஷ் மது அல்லது போதை மருந்து உட்கொண்டு கார் ஓட்டினாரா என்பதை அறிய அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
28-Jul-2025