உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யார் சிறந்த தலைவராக இருக்க முடியும்; அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை கேளுங்க!

யார் சிறந்த தலைவராக இருக்க முடியும்; அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை கேளுங்க!

புதுடில்லி: 'மக்களை முட்டாளாக்க தெரிந்தவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். டில்லியில் அகில பாரதிய மஹானுபவ் பரிஷத் அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது;எதையும் சாதிக்க ஒரு குறுக்கு வழி உள்ளது. அந்த வழிகள் மூலம் ஒருவர் வேகமாக முன்னேறுகிறார். ஆனால் அந்த குறுக்கு வழிக்கு ஒரு அர்த்தம் உள்ளது என்று ஒரு தத்துவஞானி கூறி இருக்கிறார். அது உன்னையே குறுகிய பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான்.நேர்மை, அர்ப்பணிப்பு, உண்மை ஆகியவை சமூகத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உண்மையாக இருந்தால் தான் நீண்ட கால வெற்றி கிடைக்கும். பகவத் கீதையில் கிருஷ்ணர் எழுதியது போல், இறுதியில் உண்மை எப்போதுமே வெல்லும். எந்த இடத்தில் வேலை செய்திருந்தாலும், மனதில் இருந்து வரும் உண்மையை பேசுவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களை சிறப்பான முறையில் முட்டாளாக்கி நம்ப வைக்கும் தலைவரே வெற்றி பெறுகிறார். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SRIRAMA ANU
செப் 01, 2025 21:49

மோடி பற்றி மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.... உண்மையை உரக்க பேசும் நல்ல நபர்.


T.sthivinayagam
செப் 01, 2025 21:09

தாமரை கட்சியின் உயரிய ஓரே தலைவர்


Krishna
செப் 01, 2025 20:15

கட்காரியின் மீது. எனக்கு நல்ல. எண்ணம். இருந்தது. அது குறைந்து விட்டது காரணம் குறிப்பிட்ட நேரத்தில் சாலைகள் முடிவதில்லை. மகாபலிபுரம் -மரக்காணம் ஒரு. உதாரணம். இரவு. நேரங்களில் பாதுகாப்பு அறிவிப்புகள் இல்லை . பஞ்சாயத்து யூனியன் சாலை. பாடுவது போல உள்ளது. இதே. மாதிரி. தான் சென்னை - பெங்களூரூ சாலையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை