மேலும் செய்திகள்
மெக்கானிக் தற்கொலை
20-Nov-2024
கதக்: கதக் நகரில் வசித்தவர் ஜெகதீஷ் ஹளேமனி, 37. இவர் சொந்தமாக தொழில் நடத்தினார். நல்ல வருமானம் இருந்தது. ஆனால் இவர், ஆன்லைன் விளையாட்டுக்கு, அடிமையாக இருந்தார். ஆன்லைனின் ரம்மி விளையாடி, லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார்.பணம் பறிபோனதால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர், நேற்று முன் தினம் கதக் நகரில் உள்ள, லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். இரவில் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தினார். உணவு சாப்பிட்ட பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன், ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி அரசுக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார். காலையில் நீண்ட நேரமாகியும், ஜெகதீஷ் வெளியே வராததால் லாட்ஜ் ஊழியர்கள், அறைக்குள் சென்று பார்த்த போது தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.கதக் போலீசார், ஜெகதீஷின் உடலை மீட்டனர். விசாரணை நடத்துகின்றனர்.
20-Nov-2024