பிரசாரம் மட்டுமே!
நாட்டில் வேலையின்மை பிரச்னை பெரியளவில் உள்ளது. போதுமான வேலை வாய்ப்புகளை வழங்க பா.ஜ., அரசு தவறிவிட்டது. இதனால் இடஒதுக்கீட்டு பலன்கள் தடுக்கப்படுகின்றன. பா.ஜ., அரசு பிரச்னையில், கவனம் செலுத்தாமல் பிரசாரம் மட்டுமே செய்கிறது. அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிபாகிஸ்தான் பாதுகாவலர்கள்!
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்களிடையே அந்நாட்டை பாதுகாப்பதில் போட்டி நிலவுகிறது. ராபர்ட் வாத்ரா, மணி சங்கர் அய்யர் வரிசையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.செஷாத் பூனாவாலாசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,காஷ்மீரை மீட்க வேண்டும்!
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல், அடையாள தாக்குதல் என்றெல்லாம் நடத்தாமல், அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி தர வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.அபிஷேக் பானர்ஜிலோக்சபா எம்.பி., திரிணமுல் காங்.,