உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி: புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சிபிஎஸ்இ ஒப்புதல்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி: புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சிபிஎஸ்இ ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது. சிபிஎஸ்இ புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். 2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை சிபிஎஸ்இ வாரியத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக குழு அளித்துள்ளது.இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஆக 10, 2025 18:48

அப்பொஇன்னொன்னும் பண்ணலாம். அந்த புத்தகத்துடன் மொபைல் கொண்டு வரலாம் லேப்டாப் கொண்டு வரலாம் என்று சொல்லலாம். அந்த புத்தகத்தின் அந்த பேஜை போட்டோ எடுத்து லெப்டோப்பில் போட்டு அதை மொழிபெயர்ப்பு செய்து answer பேப்பரில் அதை பதிவேற்றி அதிக மார்க்கு வாங்கலாம்


sankaranarayanan
ஆக 10, 2025 21:07

2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது அதுபோதாது புத்தகத்தை திறந்துவைத்து விடை எழுதச்சொன்னாலும் மாணவர்களுக்கு அந்த புத்தகத்தில் விடை எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் போகும் நிலை உள்ளது ஆதலால் எந்த பக்கத்தில் எந்த இடத்தில் அந்த வினாவிற்கு தகுந்த விடை உள்ளது என்றே முதலிலேயே தெரிவித்தால் சுலபமாக இருக்குமே அதையும் இப்போதே செய்யுங்கள் கல்வியின் தரம் வாழ்ந்தார் போலத்தான்