உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் தொடரும் ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தொடரும் ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 10வது நாளாக தொடர்ந்து வரும் 'ஆப்பரேஷன் அகல்' ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qigcx44z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நடவடிக்கைக்கு 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 10வது நாளான இன்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.இதற்கிடையே, காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள துல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக பிடித்துள்ளனர்.அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையின சந்தேகப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ