உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் மிலாப் நடவடிக்கை: காணாமல் போன 130 பேர் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவு

ஆபரேஷன் மிலாப் நடவடிக்கை: காணாமல் போன 130 பேர் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவு

புதுடில்லி: 'ஆபரேஷன் மிலாப் 'நடவடிக்கையின் மூலம் , காணாமல் போன 48 குழந்தைகள் உள்பட 130 பேரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்தது டில்லி போலீஸ்.கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 130 பேர் கடத்தப்பட்டும், காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டில்லியின் தென் மேற்கு மாவட்ட போலீசார் ஆபரேஷன் மிலாப் என்ற அதிரடி நடவடிக்கையால் 130 பேரை கண்டுபிடித்து மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து டில்லி தென் மேற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வீடுகளுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஆபரேஷன் மிலாப் திட்டத்தின் ஒரு பகுதியாக,ஆகஸ்ட் 1 முதல் 31 வரை தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கைகள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் அடிப்படையில்,புலனாய்வாளர்கள் உள்ளூர் விசாரணைகளை மேற்கொண்டனர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், மேலும் ஆட்டோ ஸ்டாண்டுகள், இ-ரிக்ஷா ஸ்டாண்டுகள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ரயில் நிலையங்களில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, காணாமல் போனவர்கள் கண்டறியப்பட்டனர். கண்டறியப்பட்ட 130 பேரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டனர்.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ