வாசகர்கள் கருத்துகள் ( 2 )
thodargirathu என்றால் தில்லி குண்டுவெடிப்புக்கு என்ன நடவடிக்கை ????
சென்ற முறை சிறிதளவே சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் இருந்தது. அடுத்த முறை 10 வருடம் எந்த விமானமும் பறக்காத அளவுக்கு தாக்குதல் இருக்கவேண்டும்.
மும்பை: ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என பாகிஸ்தானுக்கு இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மஹாராஷ்டிராவின் புனேவில் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு அர்ப்பணிக்கப் பட்ட இந்திய கடற்படை கடல்சார் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, அட்மிரல் திரிபாதி கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் முடிவடையவில்லை. கடற்படை முழுமையாக இதில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை எப்போதும் போருக்குத் தயாராக இருக்கிறது. இன்று, மோதல்கள் முன்னறிவிப்பின்றி நடக்கின்றன. இது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நடவடிக்கை கடற்படையின் தயார்நிலையையும், திறமையையும் நிரூபித்தது. கொடூரமான பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 96 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் கடற்படை அல்லது அவர்களின் துறைமுகங்களில் நாங்கள் தாக்குதல் நடத்த தயாராகினோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இவ்வாறு அட்மிரல் திரிபாதி தெரிவித்தார்.
thodargirathu என்றால் தில்லி குண்டுவெடிப்புக்கு என்ன நடவடிக்கை ????
சென்ற முறை சிறிதளவே சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் இருந்தது. அடுத்த முறை 10 வருடம் எந்த விமானமும் பறக்காத அளவுக்கு தாக்குதல் இருக்கவேண்டும்.