உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூர் 2.0க்கும் தயார்; ராணுவ ஜெனரல் உபேந்திரா திவேதி

ஆப்பரேஷன் சிந்தூர் 2.0க்கும் தயார்; ராணுவ ஜெனரல் உபேந்திரா திவேதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும், ஆப்பரேஷன் சிந்தூரில் மேற்கொள்ளப்பட்ட யுக்திகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது; வரும் 2027ம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறைகளில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் திறமை வாய்ந்தவர்கள் அதில் பாதி மட்டுமே இருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இந்தத் தேவையை அவுட்சோர்ஸ் செய்ய வேண்டுமென்றால், அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். எனவே, இதனை நாம் இன்றே தொடங்குவது முக்கியம். இந்திய ராணுவம் மற்றும் பள்ளிகளுக்கு ஏஐ நிபுணர்கள் தேவை. ஏனெனில் தேவை அதிகமாகவும், திறமை குறைவாகவும் இருக்கிறது. முப்படைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான கொள்கைகளைக் கொண்ட பாதுகாப்பு கொள்முதல் கையேடு, இந்த மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும், உள்நாட்டு தற்சார்பை அதிகரிக்கும் நடைமுறை வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்தையும் இறுதி செய்து விடுவோம். அரிதான பொருட்களை குறைந்தபட்சம் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கும். 2019ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மட்டும் 2.1 லட்சம் கோடியை இந்திய ராணுவம் முதலீடு செய்துள்ளது. இது ஒரு பெரிய சவால். நாங்கள் பொறுமையாக, படிப்படியான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளோம். நமது பாரம்பரிய அமைப்புகளை உடனடியாக மாற்ற முடியாது. அதனை மாற்ற குறைந்தபட்சம் 5 அல்லது 7 ஆண்டுகள் ஆகலாம். மாற்றங்கள் மூலம் அதனை சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும். தேசிய அளவிலான திட்டங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து பயணிக்கிறோம். இந்தியா ஏஐ திட்டத்தில் நாங்கள் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டோம். அதேபோல, விண்வெளி, குவாண்டம் மற்றும் 6ஜி திட்டங்களிலும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். திறந்த மூல பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு ஆகியவை ஆப்பரேஷன் சிந்தூர் 1.0ல் எங்களுக்கு மிகவும் உதவியது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் எங்களுக்கு உதவினர். ஆப்பரேஷன் சிந்தூர் 1.0ல் நாங்கள் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தோம். நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். எனவே, ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும், இந்த திட்டங்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Google
நவ 12, 2025 15:59

1.0 நிறுத்தம் செய்யாமல் இருந்தால்.


நரேந்திர பாரதி
நவ 12, 2025 15:07

தலைமைத் தளபதி அவர்களே, ஆப்பரேஷன் சிந்தூர் 2.௦ இந்திய திருநாட்டின் உள்ளே இருக்கும் புல்லுருவிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். அடிக்கும் அடியில் இனி எவன் ஒருவனும் இந்திய தாய்த்திருநாட்டிற்கு எதிராக பேசவோ, செயல்படவோ கூடாது. ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்க வேண்டும். உடனே நடக்கட்டும்...தாமதம் வேண்டாம்


பாமரன்
நவ 12, 2025 14:58

யார்...என்ன நோக்கத்தில் இந்த வெடிப்பை நடத்தினார்கள்னு ரெண்டு நாள் ஆகியும் கண்டுபுடிக்கல... இதே எதிரிகட்சின்னா ரெண்டு மணி நேரமாச்சு குய்யோமுய்யோன்னு ஒரு கும்பல் கூப்பாடு போட்டிருக்கும்..


Sri
நவ 12, 2025 15:13

Stupid Mr Pamaran, your comment shows your identity, don't comment like an idiot


S.V.Srinivasan
நவ 12, 2025 14:54

போட்டு தாக்குங்க ஆஃபீஸ்ர் சார். தீவிரவாதத்தை கூண்டோடு அழிக்கணும்.


KavikumarRam
நவ 12, 2025 14:50

தட்டித்தூக்குங்க தல.


ponssasi
நவ 12, 2025 14:49

பெரும் பொருட்செலவு செய்து பாகிஸ்தானை கதறவைக்க வேண்டாம். இந்தியாவில் ஒரு ஆபரேஷன் sindoor நடத்துங்கள். பாகிஸ்தான் கதறும், உலக நாடுகளை அழைக்கும் ஐநா வில் ஊளையிடுவார்கள். பாரதம் புத்துயிர் பெரும். களைகளை அழிக்காமல் பயிர் செழித்து வளராது.


Shankar
நவ 12, 2025 13:54

பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடு தான். அவர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய நாட்டிலேயே இருந்துகொண்டு நம்நாட்டிற்கு துரோகம் விளைவிக்கும் இவர்களைப்போன்ற தேச துரோகிகளை முதலில் களை எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களாக இருப்பது ஏனோ. பல நல்லவர்களும் முஸ்லீம் மதத்தில் இருக்கிறார்கள். அவர்களாவது இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கலாம். அவர்களும் மவுனம் காப்பது ஏனோ


duruvasar
நவ 12, 2025 14:31

உங்கள் எதிர்பார்ப்பு நியமானதுதான். ஆனால்.. நீட்டை ஒழிக்கும் ரகசியம் வைத்திருப்பவரிடம் கேட்டால் நீங்கள் சொல்லும் சக்திகளை அழிக்கும் ரகசியத்தை வைத்திருக்க வாய்ப்புக்கள். அதிகம்


RAMESH KUMAR R V
நவ 12, 2025 12:58

காலத்திற்கேற்ப நாம் மாறவேண்டும்.