உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர்.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=np2cz0qw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், இன்று (மே 14) 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர். ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப் படைத் தளபதி மார்ஷல், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து, திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து எடுத்துரைத்தனர்.பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடியை, மகத்தான வெற்றியாக மாற்றிய முப்படையினரை ஜனாதிபதி பாராட்டினார். ஜனாதிபதியை முப்படை தளபதிகள் சந்தித்த புகைப்படத்தை ஜனாதிபதி மாளிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

spr
மே 14, 2025 17:44

"இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை சிறை பிடித்தார் அதன்பிறகு நடந்த பல மறைமுக பேச்சு வார்த்தைக்குப் பின்பு அவர்கள் அனைவரையும் விடுவித்தார் ஆனால் அதற்கு ஈடாக அவர் பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை சரி அது போகட்டும் அதற்கு ஈடாக பாகிஸ்தான் சிறைகளில் வாடிய நம் 54 இந்திய போர்க் கைதிகளையாவது விடுவித்து இருக்கலாம் அதையும் செய்யவில்லை. அப்பா காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு அடமானம் வைத்தார் பெண் கச்சத்தீவின் முக்கியத்துவம் புரியாமல் நிபந்தனையின்றி இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் அப்பா காஷ்மீரின் ஒரு பகுதியை நிபந்தனையின்றி பாகிஸ்தானுக்கு அடமானம் வைத்தார் பெண் கச்சத்தீவின் முக்கியத்துவம் புரியாமல் நிபந்தனையின்றி இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் " இன்று மோடி அந்நிய நாட்டின் அறிவுரையை ஏற்றுத்தான் போர் நிறுத்தம் செய்தாரா எனக் கேள்வி கேட்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா ?


Velayutham rajeswaran
மே 14, 2025 14:27

வெற்றி தோல்வி பற்றி சுந்தர வில்லி ராஜா போன்ற தேச பக்தர்கள் சொன்னால் தான் நம்புவோம்?????


SUBBU,MADURAI
மே 14, 2025 13:52

பலருக்குத் தெரியாத ஒரு உண்மை விஷயம் இதுதான் 1971ல் பாகிஸ்தான் போருக்குப் பிறகு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை சிறை பிடித்தார் அதன்பிறகு நடந்த பல மறைமுக பேச்சு வார்த்தைக்குப் பின்பு அவர்கள் அனைவரையும் விடுவித்தார் ஆனால் அதற்கு ஈடாக அவர் பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை சரி அது போகட்டும் அதற்கு ஈடாக பாகிஸ்தான் சிறைகளில் வாடிய நம் 54 இந்திய போர்க் கைதிகளையாவது விடுவித்து இருக்கலாம் அதையும் செய்யவில்லை அந்த இந்தியர்களை பாகிஸ்தானில் இருந்து திரும்பப் பெறத் தவறிவிட்டதால் அவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் தங்கள் வாழ்நாளை கழித்து இறந்து விட்டார்கள். 93,000 பேரைக் கொடுத்தார், ஆனால் 54 பேரைத் திரும்பப் பெற முடியவில்லை ஏன்? ஆகவே அந்த இந்திரா அம்மையார் துணிச்சலான தலைவர்தான்! நம் இந்திய வரலாற்றில் இது போன்று பல பதில் தெரியாத கேள்விகளுக்கு சொந்தக்காரர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேருவும், அவரின் மகள் இந்திராகாந்தியும், அவருடைய மகன் ராஜீவ்காந்தியும், அவருக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் பொம்மை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?


M. PALANIAPPAN, KERALA
மே 14, 2025 13:28

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ராணுவ தளபதி உபேந்திர திவேதி விமானப் படைத் தளபதி மார்ஷல் கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி நால்வருக்கும் நல் வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி