ஆப்பரேஷன் சிந்துார் வெளியுறவு செயலர் விளக்கம்
புதுடில்லி: நம் வெளியுறவுதொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைவராக உள்ளார். உறுப்பினர்களாக திரிணமுல் காங்., அபிஷேக் பானர்ஜி, காங்கிரசின் ராஜிவ் சுக்லா, தீபிந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, பா.ஜ.,வின் அபராஜிதா சாரங்கி, அருண் கோவில் போன்ற எம்.பி.,க்கள் உள்ளனர்.இந்த குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, குழு முன் ஆஜரான வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடனான ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விளக்கினார். ''போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. பாக்., அணு ஆயுத தாக்குதலுக்கு முயற்சிக்கவில்லை. ''போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து தான், முதலில் கோரிக்கை வந்தது,'' என, விக்ரம் மிஸ்ரி விளக்கிக் கூறினார்.