உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் அதிகாலை 1 மணிக்கு நடத்தியது ஏன்? முப்படை தளபதி சொன்னது இது தான்!

ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் அதிகாலை 1 மணிக்கு நடத்தியது ஏன்? முப்படை தளபதி சொன்னது இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எல்லையைத் தாண்டி பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முதல் தாக்குதல்கள் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது'' என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானை இந்தியா தீர்க்கமாக தோற்கடிப்பதை உறுதி செய்தது. பாரம்பரிய போர்களைப் போலன்றி இது நிலத்திலும், வான்வழியிலும், கடலிலும் நடத்தப்பட்டது. எதிரியை செயற்கைக்கோள் மற்றும் மின்னணு படத்தில் காண முடிந்தது. முன்பு, நாங்கள் பாலகோட் நடவடிக்கையை மேற்கொண்டோம், ஆனால் எங்களிடம் செயற்கைக்கோள் படங்களோ, புகைப்படங்களோ இல்லை. ஆனால் இரவின் இருளில் ஆதாரங்களை சேகரிப்பதில் சிரமம் இருந்தபோதிலும், இப்போது ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதலாவது படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இரண்டாவது, எல்லையைத் தாண்டி பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையின் போது முதல் தாக்குதல்கள் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது.காலை 5.30 மணி அல்லது 6 மணிக்கு நடத்தினால் தொழுகையின் போது பல பொதுமக்கள் உயிர் இழந்திருப்பர். அதை நாங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க விரும்பினோம். நமது ஆயுதப் படைகள் எதிர்கால போர்க்களத்தை சமாளிக்க தயாராகி வருகின்றனர். இவ்வாறு அனில் சவுகான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ravi Kumar
செப் 19, 2025 13:51

அற்புதம்


Ramesh Sargam
செப் 19, 2025 12:50

போரின்போது எதிரி நாட்டு சாமான்ய மக்கள் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து போர் தொடுத்த ஒரே நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்கும். இந்த விதமான மனிதாபிமான போர் எங்கும் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. வாழ்க இந்தியா.


Naga Subramanian
செப் 19, 2025 12:43

அருமையான மற்றும் தீர்க்கமான முடிவு வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்


Sun
செப் 19, 2025 12:21

இந்திய ராணுவத்திற்கு Hats off .நீங்க என்னதான் சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம். ஆசிம்முனீர், டிரம்ப் சொல்வதைத்தான் நாங்க நம்புவோம். இந்திய மக்களையும் நம்ப வைக்க முயற்சிப்போம் .இப்படியும் சில கடைந்தெடுத்த ஜென்மங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்ற பெயரில் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன.


சமீபத்திய செய்தி