உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் த்ராஷி மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் த்ராஷி மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஏப்.,22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கையால், கேலர் மற்றும் நடர் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்கும் பணிகள் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 'ஆபரேஷன் த்ராஷி' என்ற பெயரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 3 அல்லது 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராணுவத்தின் ஒரு பிரிவான வெள்ளை நைட் படைப்பிரிவு விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'பயங்கரவாதிகளுக்கு எதிராக 'ஆபரேஷன் த்ராஷி' என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் உடனான பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை வீழ்த்தும் பணி தொடர்ந்து வருகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

E. Mariappan
மே 22, 2025 21:02

ஒருத்தனை கூட விடாமல் சுட்டுக் கொல்ல வேண்டும்


Ramasamy V.savadamuthu
மே 22, 2025 17:29

இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம் ஜெய்ஹிந்த்


Ravi Kulasekaran
மே 22, 2025 17:19

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சீக்கிரம் காலி செய்ய வேண்டும் சூட்டோடு சூடாக யுத்தம் அதிகம் ஆனால் மலையை தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் சரண்டர் ஆகி விடுவான் பலுசிஸ்தான் ஒரு புறம் நாம் உதவி செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை