உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.91 கோடியப்பே... மின்சாரத்தை திருடியதாக எதிர்க்கட்சி எம்.பி., மீது புகார்

ரூ.1.91 கோடியப்பே... மின்சாரத்தை திருடியதாக எதிர்க்கட்சி எம்.பி., மீது புகார்

லக்னோ: உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியா உர் ரஹ்மான் பார்க் மீது மின்சாரம் திருடியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தையே உலுக்கிய சம்பல் வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முக்கிய குற்றவாளியாக எம்.பி.,ஜியா உர் ரஹ்மான் பார்க் இருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக இவர் தனது பேச்சுக்கள் மூலம் கும்பலை வன்முறைக்கு தூண்டி விட்டதாக உத்தரபிரதேச போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இதனை அவர் மறுத்துள்ளார். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க அலகாபாத் கோர்ட்டில் எம்.பி., பார்க் தாக்கல் செய்த மனு வரும் டிச.,18ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாக மின்சாரத்தை திருடியதாக எம்.பி., ஜியா உர் ரஹ்மான் பார்க் மீது மின்வாரியத்துறையினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ரூ.1.91 கோடி மின்கட்டணம் வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், மின்வாரியத்துறை அதிகாரிகள் எம்.பி., பார்க்கின் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அவரது வீட்டின் இரு மீட்டர்கள் சேதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மின்கட்டணமான ரூ.1.91 கோடியை செலுத்தாததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை செலுத்தவில்லை எனில், பறிமுதல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ