உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழகிகள் காலை கழுவிய பெண்கள்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்

அழகிகள் காலை கழுவிய பெண்கள்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவில், உலக அழகிப் போட்டிக்காக வந்துள்ள பெண்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் கழுவியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம் அளித்துள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 31ம் தேதி, 'மிஸ் வேர்ல்டு' எனப்படும் உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அழகிகள், தெலுங்கானா வந்துள்ளனர். அவர்களை மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

கடும் கண்டனம்

அதன்படி, 'யுனெஸ்கோ'வால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் ராமப்பா கோவிலுக்கு, அழகிகள் சென்றனர். அங்கு, அவர்களை வரிசையாக அமர வைத்து, அவர்களின் கால்களை உள்ளூர் பெண்கள், தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். அதிலும் சிலரது கால்களை துண்டால் உள்ளூர் பெண்கள் துடைத்தனர். இந்த செயலுக்கு, தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மரியாதை

இதற்கு, தெலுங்கானா காங்., அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'விருந்தினர்களை கடவுளாக பாவிக்கும் கொள்கையின்படி, நாம் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறை தான் இது. 'இதன் வாயிலாக, நம் சர்வதேச விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை வழங்கி இருக்கிறோம்' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தத்வமசி
மே 16, 2025 19:49

இவர்கள் பக்தர்களாக இந்தியாவிற்கு வந்து இந்திய புண்ணிய பூமியில் உள்ள புண்ணிய தளங்களை தரிசிக்கும் பக்திமான்களாக இருந்தால், அப்போது கூட இவர்களுக்கு வரவேற்பு மட்டுமே அளிக்கலாம். கால் கழுவி விடுவது என்பது தாய், தந்தை, குரு, பெரிய மகான்கள் இவர்களுக்கு மட்டுமே உரித்தானது. திராவிடத்தில் சொந்த அம்மா அப்பாவுக்கு பாதபூஜை செய்யவே தடை உள்ளது. இதற்கு திராவிடம் பொங்காது.. இவர்களை வைத்து ஒரு நிகழிச்சியை தமிழகத்தில் செய்யலாமா என்று கல்லா கட்ட திட்டம் இப்போது போட்டுக் கொண்டிருக்கும். அவ்வளவு தான் திராவிடம். எவனும் பொங்க மாட்டான். காரணம் அங்கே காங்கிரஸ் ஆட்சி.


K Veerappan
மே 16, 2025 12:41

ரேவந் ரெட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் எல்லா பத்திரிகைகளும் மற்றும் எல்லா எதிர் கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் பேசாமல் இருப்பார்கள்.


Gurumurthy Kalyanaraman
மே 16, 2025 10:25

எழுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டு இந்தியரகளின் அடிமை எண்ணத்தை வளர்த்து இருந்தது. தற்போதய ஆட்சி அதை களைந்து எல்லோரும் சமமே என்ற நிலையை கொண்டு வந்து இருக்கிறது. துபாய், சவூதி போன்ற தேசங்கள் இந்தியரகளை அடிமையாய் நடத்துவதை இப்போதுதான் கைவிட்டு இருக்கின்றன. மீண்டும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அடிமைத்தனத்தை ஆரம்பித்து வைக்கிறது. உறுப்பட்டாப்லதான்.


vbs manian
மே 16, 2025 09:51

தாழ்வு மனப்பான்மையின் கொடூர முகம். இந்தியா உண்மையான சுதந்திரம் அடையவில்லை.


krishna moorthy
மே 16, 2025 08:47

விருந்தோம்பல் செய்ய வரவேற்க பல வழிமுறைகள் இருக்க இந்த வழிமுறை சரியா?


Sri Sri
மே 16, 2025 08:20

அழகிப் போட்டியே அசிங்கம்


Srinivasan S
மே 16, 2025 07:46

நமது ஸனாதன தர்மத்தில் அனைவரும் கடவுள்களாகப் பாவிக்கத் தகுந்தவர்கள் என்றாலும் விருந்தோம்பல் என்ற பெயரில் காலைக் கழுவது குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்கள், வயது முடிர்ந்த பெரியோர்கள் ஆகியவர்கள் காலில் விழுந்து அல்லது தொட்டு வணக்கலாமே தவிற காலைக் கழுவுதல் பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் மட்டும் உரியது.


GMM
மே 16, 2025 07:24

காங்கிரஸ் கொள்கை அரேபியா மேற்கத்திய நாடுகளுக்கு எழை இந்துகளை மதம் மாற்றி, கொத்தடிமை ஆக்கி சிறுபான்மை வாக்கு பெறுவது. / தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவது. விருந்தோம்பல் என்றால், கைகால் கழுவுதல் , மஜாஜ் செய்வது கிடையாது. காங்கிரஸ் வீட்டு பெண்களை செய்ய வைக்க முடியுமா?


நிக்கோல்தாம்சன்
மே 16, 2025 07:05

காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான நடத்தை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை