உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 2வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்!

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 2வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2வது நாளாக பார்லிமென்ட் முடங்கியது.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hk9mt8p7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூலை 22) 2வது நாளாக பார்லிமென்ட் கூடியது. லோக்சபா காலை 11 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அவையை பிற்பகல் 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பிறகு அவை கூடிய போது அமளி தொடர்ந்ததால், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா பிறகு நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.அதேபோல், ராஜ்யசபா கூடியதும், அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்த விவகாரம் குறித்து எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் பிற்பகல் 12 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது அமளி தொடர்ந்ததால், நாள் முழுதும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முரண்டு பிடித்து அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் 2வது நாளாக முடங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூலை 22, 2025 19:18

இப்படியே எத்தனை நாட்கள் மக்கள் பணம் விரயம் ஆகும்.ஜனாதிபதியே குறுக்கிட்டு இதற்கு ஒரு எச்சரிக்கை வார்னிங் கொடுத்து சபையை கூட்ட ஆவண செய்ய வேண்டும் அவரும் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது.சபை கட்டுப்பாடுகளை மீறுபவர்களை அவர்தான் வெளியற்றி பதவியை பறிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம்.


D Natarajan
ஜூலை 22, 2025 13:58

10 முக்கியமான ம்பிக்களை , அமளியில் ஈடுபடுவர்களை சுமார் 30 நாட்களுக்கு இடை நீக்கம் செய்ய வேண்டும். கருணை காட்டக் கூடாது. அல்லது எதிர்க்கட்சியினரை பார்லிமென்ட் வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது.


sankaranarayanan
ஜூலை 22, 2025 13:29

அம்மா பண்ணு புள்ளையாண்டான் இவர்கள் ஒன்று சேர அமக்களாம் செய்யுமிடமாக இந்திய ஜனநாயக பாராளுமன்றமும் ராஜ்ய சபாவும் ப்யவிட்டதே என்றுதான் இந்திய மக்கள் கவலையில் இருக்கின்றனர் இந்த மூவரையும் அவையைவிட்டு நீக்கிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் ஜனநாயகம் தழைக்கும் பிழைக்கும்


Balasubramanyan
ஜூலை 22, 2025 12:56

Request to speaker. Pl bar Jairam Ramesh,Garge,and our great opposition leader inLokSabha andRajyaSabha from attempting to damage the integrity and honour of their motherland. What or they ask the other slaves to them to disturb proceedings. Are they saviour of democracy.pl. Make amendment to cut their salary and other perks and make them to repay the taxpayers money and valuable time. Harsh methods should be there. No comment about DMK MPs. Their gene is like that nobody can change.who will show the comments to these politicians.


GMM
ஜூலை 22, 2025 12:40

எதிர்க்கட்சி பயனற்ற அமளிக்கு தேர்தல் ஆணையம் முடிவு கட்ட வேண்டும். உறுப்பினர்கள் தேர்வு, ஒழுங்கு நடவடிக்கை, நீக்கம் தேர்தல் ஆணையம் அதிகாரம். சபாநாயகர் தேர்தல் ஆணையருக்கு சபை முடக்கும் உறுப்பினர்கள் பற்றி மறு நாள் அறிக்கையை கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பதவியை பறித்து அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயரை உடன் நீக்க வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 22, 2025 12:26

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விவாதம் எதற்கு? தேசிய பாதுகாப்பு ராணுவ நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு என்ன? விவாதம் நடத்தினால் விதண்டாவாதம் செய்யவா? 1972 போரின் போது காங்கிரஸ் விவாதம் நடத்தியதா? விவாதம் தேவை என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற.....!!!


saravan
ஜூலை 22, 2025 12:11

மொத்த கூட்டத்தையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு பார்லிமென்ட் ஐ நடத்தவும் இந்த ஜெயராம் ரமேஷ் போன்றோர் செய்திகளில் வந்துகொண்டே இருக்க வேண்டும் எதையாவது உளறுவார்கள் மக்கள் பணம் இதுபோன்ற முட்டாள்தனமான அமளிகளால் வீணடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது


vbs manian
ஜூலை 22, 2025 11:46

பார்லிமென்ட் ஒரு நாள் நடத்த ஆகும் செலவில் ஒரு கிராமத்துக்கு மின் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம்.


Sivasankaran Kannan
ஜூலை 22, 2025 11:34

எதிர் கட்சிகள் இந்தியாவின் எதிரி கட்சிகள் . அவர்களால் பாக்கிஸ்தான் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஏன் என்றால், அது பிஜேபி வெற்றி என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்திய மக்கள் இந்த கூட்டத்தின் முகத்தில் காரி உமிழ்ந்து அடுத்த தேர்தலில் ஓட விட வேண்டும்..


kannane
ஜூலை 22, 2025 11:29

மக்களது வரி பணம் வீன்ஆவதில் யாருக்கும் கவலையில்லை.


சமீபத்திய செய்தி